அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் ஆலோவேரா!
2022-06-22@ 17:55:54

நன்றி குங்குமம் டாக்டர்
கற்றாழை இயற்கை நமக்களித்த பெருங்கொடை. உடலின் உட்புறம் வெளிப்புறம் இரண்டிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய அருமருந்து இது. அதனால்தான் நம் பாரம்பரியமான மருத்துவத்தில் காயகற்ப மூலிகைகளில் ஒன்று எனப்படுகிறது.இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களும், பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது. தொற்றுக்கிருமிகள் உடலில் ஆதிக்கம் செலுத்தும்போது அதை எதிர்த்துப் போராடும் சக்தியை கற்றாழை உடலுக்குத்தருகிறது.
கற்றாழை சாறு பருகுவதன் பலன்கள்
*அன்றாடம் எடுத்துக்கொள்ளும்போது, சீரணத்தை ஒழுங்குபடுத்தி செரிமானம், வளர்சிதை மாற்றம் சரிவர நடக்க உதவுகிறது. உடலின் எடையை குறைக்கிறது.
*நெஞ்செரிச்சலைத் தணித்து வயிற்றுப்புண்ணைக் குறைக்கிறது. இது ஒரு இயற்கையான மலமிளக்கி. இதன் சாறு குடல்களில் உள்ள மலத்தை மென்மையாக்குகிறது.
*கற்றாழை சாறு உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது, மேலும் ஈரலைச் சுத்தப்படுத்தி தோலை பாதுகாக்கிறது.
*ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதால் ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.
*இதிலுள்ள மெக்னீசியம் நரம்பையும், தசைகளையும் வலுவாகப் பார்த்துக்கொள்ளும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
*மாதவிடாய் தொந்தரவுகளை ஒழுங்குபடுத்துகிறது.
கற்றாழைச் சோற்றின் வெளிப்புற பலன்கள்
*தோலில் ஏற்படும் அழற்சியை நீங்கி, குளிர்ச்சியை அளிக்கிறது. தோலில் உள்ள துவாரங்களைத் திறந்து தோலை மென்மையாக, பளபளப்பாகப் பார்த்துக்கொள்கிறது.
*வெயிலினால் ஏற்படும் தோல்புண்கள், தீப்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
*ஆண்கள் சவரம் செய்த பின்பு After Shaver ஆக கற்றாழைச் சாற்றைப் பயன்படுத்தினால், எரிச்சலைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் பாதுகாக்கும்.
*இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் முதுமையினால் ஏற்படும் தோல் சுருக்கங்களைக் குறைக்கிறது.
*இந்தச் சாற்றில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தோலில் புதிய செல்கள் வளர முக்கிய காரணமாக அமைகின்றன.
மேலும் செய்திகள்
உலர்திராட்சை
வெங்காயம் நோயின் பாதுகாவலன்!
டாக்டர் டர்னிப்!
பெருங்காயத்தின் பெரு மதிப்பு
தேங்காய் இயற்கையின் ஆசீர்வாதம்!
அர்த்தமுள்ள பெயர்தான்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!