SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாக்டர் டர்னிப்!

2022-06-21@ 17:51:27

நன்றி குங்குமம் டாக்டர்

மேற்கு ஆசியப் பகுதிகளில் தோன்றி ஐரோப்பாவுக்கும் பிறகு உலக நாடுகளுக்கும் பரவிய காய் டர்னிப். கிழங்குவகைகளைப் போல வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் காய் இது.

*டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகளும் உண்ணப்படுகின்றன.

*டர்னிப்பில் வெள்ளை டர்னிப், பர்பிள் டர்னிப், சிவப்பு டர்னிப், பேபி டர்னிப், ஸ்னோ பால் டர்னிப், கோல்டன் டர்னிப் என 6 வகைகள் உள்ளது. இவை அனைத்தும் சூப்கள், கூட்டு வகைகள், கறி வகைகள், சாலட் போல இன்னும் பல வகைகளில் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

*டர்னிப்பில் வைட்டமின்கள் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. வைட்டமின் இ மற்றும் கே ஆகியவற்றையும் இக்காய் கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன.

*டர்னிப்பில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல்
பாதுகாக்கிறது.

*ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு அவசியமான இரும்புச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியாவைத் தடுக்கிறது.

*டர்னிப்பில் வைட்டமின் சி-யானது அதிகளவு காணப்படுகிறது. வைட்டமின் சி-யானது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை பெருகச் செய்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் உடலுக்கு நோய் தடுப்பாற்றலை வழங்குகின்றன.

*டர்னிப் அதிகளவு கால்சியம் மற்றும் மாங்கனீசைக் கொண்டுள்ளது. இவை உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை அளிப்பதோடு அவை வளர்வதற்கும் உதவுகின்றன.

*டர்னிப்பில் வைட்டமின் சி, இ, மாங்கனீசு, பீட்டா கரோடீன் போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகள் காணப்படுகின்றன. இவை செல் உருவாக்கத்தின்போது ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து உடலினை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

*ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ள டர்னிப் போன்ற உணவுகளை உண்ணும்போது புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

*டர்னிப்பில் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டினைத் தடுக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. எனவே, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம்.

*டர்னிப் கீரை மற்றும் கிழங்கில் குறிப்பிட்ட அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. எனவே சிறுநீரகம் மற்றும் சிறுநீர்பாதையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரக கற்கள் பிரச்னையினால் அவதிப்படுவோர் டர்னிப்பினைத் தவிர்ப்பது நலம்.

தொகுப்பு - ஞானதேசிகன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்