நடப்போம்… நலம் பெறுவோம்!
2022-06-20@ 17:43:00

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
நோய்கள் இன்றி நலமுடன் வாழ தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். அந்தக் காலத்தில் அனைவரும் தினமோ, அடிக்கடியோ கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து, கோயில் பிராகாரங்களை வலம் வருவர். ஆன்மீகத் தலங்களுக்கு பாத யாத்திரை, கிரிவலம், மலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்வது போன்ற தெய்வீகத்துடன் கூடிய நடைப் பயிற்சியை மேற் கொண்டனர். இன்றைய இயந்திர மயமான காலகட்டத்தில் நடைப் பயிற்சி என்னும் சிறந்த பழக்கம் நம்மை விட்டு மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. அனேகமாக அனைவரும் இருசக்கர வாகனங்களைபயன்படுத்தியே வாழ்கின்றனர்.
*கை, கால்களுக்கு தேவையான அளவு அசைவுகளை கொடுக்காவிட்டால் உடல் உபாதைகள் நமது உடலுக்குள் அழைப்பில்லாமலேயே குடியேறி விடும். ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு, வயிறு பெருத்தல், சூரிய ஒளி உடலில் படாததால் வைட்டமின் ‘டி’ குறைபாடு, உறக்கமின்மை, மூட்டு வலி, மலச்சிக்கல் என எண்ணிலடங்காத உடல் சார்ந்த துன்பங்கள் தேடி வந்து தொல்லை கொடுக்கும்.
*விடியற்காலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நாள் முதல் உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
நடைப்பயிற்சியால் கிடைக்கும் பல நன்மைகள்
*எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம். மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைப் பயிற்சியைத்தான்.
*நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க மருந்துகளை உட்கொள்வதும், நடைப்பயிற்சியும் அவசியம் என அனைத்து மருத்துவர்களும் கூறுகின்றனர்.
*ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க நடைப்பயிற்சி அவசியமாகிறது.
*இரவு உணவுக்குப் பின் சில நிமிடங்கள் நடந்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். அடுத்த நாள் காலையில் புத்துணர்வுடன் எழ முடியும்.
*இளமையைத் தக்க வைக்க ஒரே வழி நடைப்பயிற்சி.
*நடைப்பயிற்சியால் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு, சுவாசப் பாதையும் வலிமை பெறும்.
*ஜீரணக் கோளாறுகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் தீரும்.
*கூட்டமாக நடக்காமல், பேசிக் கொண்டே நடக்காமல், மெல்லிய இசையையோ, நல்ல புத்துணர்வு தரும் பாடல்களையோ தெய்வீக சுலோகங்களையோ, ஆன்மீக
சொற்பொழிவுகளையோ கேட்டுக் கொண்டு நடந்தால் நன்மைகள் பூரணமாக கிடைக்கும்.
தொகுப்பு - அ.திவ்யா, காஞ்சிபுரம்.
Tags:
நடப்போம்… நலம் பெறுவோம்!மேலும் செய்திகள்
முதுமையிலும் இனிமை காண்போம்!
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அவசியம்!
ஆர்த்ரைட்டிஸை வெல்வோம்!
தெரப்பிகள் பலவிதம்
பலமாகும் பழங்கள்! ஃப்ரூட்டேரியன் டயட்!
மறந்து வாடும் நெஞ்சு... அல்சைமரைத் தடுப்போம்!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!