SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருவநிலை மாற்றத்தால் எலும்புகளுக்கும் பாதிப்பு

2022-05-12@ 16:47:13

நன்றி குங்குமம் டாக்டர்

மாறிவரும் பருவநிலை மாற்றம் மற்றும் வயது முதிர்வு ஆகியவற்றின் காரணமாக பலருக்கு எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறுவதன் மூலம் அந்த பிரச்னைகளில் இருந்து எளிமையாக விடுபட முடியும். எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமாக உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விரிவாக பார்ப்போம்.

நமது நாடு அதிக வெப்பம் நிறைந்த நாடாகும். குறிப்பாக தென்னிந்தியாவைப் பொறுத்தவரை குளிர்காலத்தைத் தவிர பிற நேரங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழல் நிலவுகிறது. எனவே, குளிர்காலத்தில் நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பருவநிலை மாற்றங்களுடன், வானிலைக்கு ஏற்ப மனித உடலின் சக்தியும் அவரவர்களின் வயதுக்கேற்ப மாறுபடுகிறது. எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்னைகள் கோடை காலத்தைவிட குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும்.

குளிர் காலத்தில்...

தற்போது வயது முதிர்வு மற்றும் அதிக உடல் பருமன் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குளிர்காலத்தில் வயதான நோயாளிகளுக்கு மூட்டு வலி என்பது பொதுவான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் எலும்பு மற்றும் மூட்டுகளில் பலவிதமான வலி மற்றும் வேதனைகளுக்கு ஆளாகிறார்கள். ஏற்கனவே மூட்டு வலி உள்ள வயதானவர்கள் குளிர் காலத்தில் மூட்டு சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. அவர் களின் வயது முதிர்வு காரணமாக அவர்கள் எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதாலும் குளிர் காலத்தில் அவர்களின் தசைகள் சுருக்கம் அடைவதாலும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தில் கீல்வாதம், முதுகெலும்பு மூட்டுகளில் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக சர்வதேச ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

குளிர் காலத்தில் உடலில் ஒருவித திரவ இழப்பு ஏற்படுவதால், தசை செயல்பாடு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் அதிக வெப்பம் ஏற்படுகிறது. இதனால் தசைப் பிடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் குறைவான தண்ணீரைக் குடிப்பதால், உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றம் குறைதல், நீர் சத்து குறைபாடு மற்றும் இரவு நேரங்களில் தசைப் பிடிப்புகளும் ஏற்படுகிறது. குளிர் காலங்களில் உடலை சூடாக வைத்திருக்கும் ஆடைகளை அணிய வேண்டும். அப்போதுதான் தசைகளின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும். குளிர் காலத்தில் சூரிய ஒளி அதிகம் இல்லாத காரணத்தாலும் மக்கள் அதிகம் வெளியே செல்லாமல் வீடுகளில் இருப்பதாலும் வைட்டமின் டி குறைபாடும் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றால் உடலுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படும்.

கோடை காலத்தில்...

இதற்கு மாறாக கோடை காலத்தில் ஏற்படும் உடல் தசை பிடிப்புகள் கடுமையான வெப்பம், உடலில் சோடியம் மற்றும் கால்சியம் சத்து குறைவு, நீர் மற்றும் எலக்ட்ரோலைட் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகின்றன. அதிக உடற்பயிற்சி, அதிக நேரம் வெப்பத்தில் வேலை செய்வது அல்லது விளையாடுவது போன்றவை தசைகளுக்கு சோர்வை ஏற்படுத்துவதோடு தொடைகள், காலின் பின்புறம் மற்றும் தோள் பட்டைகளை அதிக அளவு பாதிக்கிறது. மேலும் இதன் காரணமாக வெப்பம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.

விபத்துகள் மற்றும் கீழே விழுதல்

மழை காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறுவதோடு சாலைகளில் பள்ளங்களும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது அனைத்து வயதினருக்கும் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் மழை காலங்களில் வீட்டின் தரைகள் குளிர்ச்சியாக இருப்பதால் வயதானவர்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஆலோசனை அவசியம்


இந்த பிரச்னைகள் வராமல் தடுக்க, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி, நோயின் பல்வேறு நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாறிவரும் பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் சரியான சிகிச்சையை பெறுவது அவசியம் ஆகும்.

வலி நிவாரணிகள்

நம்மிடையே உள்ள ஒரு தவறான விஷயம் என்னவென்றால் எந்த வலியாக இருந்தாலும் மருத்துவர்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளையும் பெறாமல் தாங்களே வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகும். வலி என்பது ஒரு அறிகுறி மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால், அந்த வலி ஒருபோதும் குறையாது மற்றும் அதிக வலி நிவாரணி மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது அது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் எலும்பியல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை பெறுங்கள்.

அவர்கள் உங்களுக்கான பிரச்சினையை அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகளில் குணப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வார்கள். அவற்றில் சரி செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும்போதுதான் அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பார்கள்.

உடற்பயிற்சி மற்றும் உணவு

கால்களை நன்றாக நீட்டி மடக்குதல், நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மூட்டுகளுக்கான சிறந்த உடற்பயிற்சிகளாகும். மேலும் உங்கள் மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான தசைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவு தவிர, நல்ல உடற்பயிற்சி அவசியம்.

உருளைக்கிழங்கில் என்ன இருக்கு...

மேற்கத்திய நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் உணவுகளில் மிக முக்கியமானது உருளைக்கிழங்கு. மேற்புறத்தோல்பச்சை நிறத்தில் இருந்தால் அதை சமைக்கக்கூடாது. உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய வைட்டமின் சி சிறந்த ஆதாரமாக இருக்கிறது. பொட்டாசியம், வைட்டமின் பி-6 மற்றும் ஃபைபர் ஆகியவை உருளைக்கிழங்கில் அதிகமாகவே உள்ளன. மேலும், கரோட்டினாய்டுகள் (Carotenoids), ஃப்ளேவனாய்டுகள் (Flavonoids) மற்றும் காஃபிக் அமிலம் (Caffeic acid, போன்ற மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான அனைத்து வகையான நுண்ணூட்டச்சத்துக்களும் (Phytonutrients) உள்ளன.

உருளைக்கிழங்கை சமையலில், மசாலா, காரம் உப்பு அதிகமாக சேர்த்தும், எண்ணெயில் பொரித்து சிப்ஸாகவும், வறுவலாகவுமே சாப்பிடுகிறோம். இதன்மூலம் அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களை அழித்துவிடுகிறோம். உருளைக்கிழங்கை வெறுமனே வேகவைத்து உப்பு, மிளகு மட்டும் சேர்த்து சாப்பிட்டால்தான் அதன் முழு சத்தும் கிடைக்கும். குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை கொடுத்தால் கார்போஹைட்ரேட், வைட்டமின், புரோட்டீன் என அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்