புள்ளி இல்லா பொலிவு
2021-12-20@ 17:40:04

நன்றி குங்குமம் தோழி
சிலருக்கு வெள்ளை புள்ளிகள் ஒரு சிறிய வடிவில் நெற்றி, தொடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி முக வசீகரத்தைக் குறைக்கும். இந்த மாதிரியான வெண்புள்ளிகளை இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதாக நீக்கலாம்.
* ½ டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 டீஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்துக் கலந்து மூக்கு, தாடை, நெற்றி போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* 3 சொட்டுகள் டீட்ரி ஆயிலுடன் ½ டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.
* 4 சொட்டுகள் ஆப்பிள் சிடர் வினிகருடன் 1 டீஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்துக் கலந்து நெற்றியில், தாடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவவும்.
* 2 டேபிள் ஸ்பூன் சமைத்த ஓட்ஸுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தாடை மற்றும் நெற்றியில் தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்துப் பின் நீரினால் அலசவும்.
* ½ டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் தண்ணீருடன் கலந்து பாதிப்படைந்த இடத்தில் நன்றாகத் தேய்த்து, பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு 2-3 தடவை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
Tags:
புள்ளி இல்லா பொலிவுமேலும் செய்திகள்
பெண்களை தாக்கும் வழுக்கைக்கு குட்பை!
நுரையீரலின் தசை அழற்சி
முடி உதிர்வுக்கு பிஆர்பி சிகிச்சை...
வெயில் பாதி... மழை பாதி...
கொரோனாபோபியா
பற்களை பாதுகாக்கும் ஃப்ளாஸிங்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்