SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனதால் வரும் உடல்வலி

2021-10-18@ 16:55:36

மனதையும் உடலையும் இணைக்கும் ஒன்றுதான் Psychosomatic disorder. இதில் மன ரீதியான பாதிப்பு உடல் நல பாதிப்பாக வெளிப்படும். சைக்கோசொமோட்டிக் டிஸ் ஆர்டர் மூலம் உடலில் புதிதாக ஒரு வலி உண்டாகலாம் அல்லது ஏற்கனவே சிறிய அளவில் உள்ள ஒரு நோய் பெரிய அளவில் மிகவும் மோசமாகி விட்டதை போல உணரலாம். உளவியல் ரீதியான காரணங்கள், மன அழுத்தப் பிரச்னைகள் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. இரு பாலாருக்குமே இந்த பிரச்னை வந்தாலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது.

இன்னும் எளிமையாகச் சொன்னால் சிலருக்கு உடலில் ஒரு சில பாகங்களில் தொடர்ந்து வலி, வலி என்று சொல்லி பல மருத்துவர்களை அணுகுவார்கள். பரிசோதனைகள் பலவற்றைச் செய்து பார்த்தால் அவர்களுக்கு உடல் ரீதியாக ஒன்றுமே பிரச்னை இருக்காது இதைத்தான்  Psychosomatic disorder என்கிறோம். உங்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏதுமில்லை என ஒரு மருத்துவர் சொன்னால் நம்பாமல் வேறு ஒரு மருத்துவரை நாடுவார்கள்.

பின் எதாவது நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவருக்கு இந்த பிரச்னை இருக்கும் என்று அறிந்து மனநல மருத்துவர்களைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வார்கள். ஆனால், இவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே இவர்கள் பல பரிசோதனைகள் செய்திருப்பார்கள். சிலர் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கூட போய் இருப்பார்கள்.

பல மருத்துவர்களிடம் சென்று கையில் பெரிய ஃபைல் அல்லது நிறைய ரெக்கார்டுகள் வைத்திருப்பார்கள். நிறைய செலவழித்திருப்பார்கள். அனுபவமிக்க மருத்துவர்கள் முதல் ஒரு சில முறைகளிலே இதனை கண்டறிந்து விடுவார்கள். ஆனாலும் முதல் எடுத்த உடனே உங்களுக்கு இருப்பது மனநலப் பிரச்னைதான் என்று சொல்லக்கூடாது- அவர்களுக்கு பரிசோதனைகளில் உடல் ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் தான் இந்த பிரச்னையாக இருக்கலாம் என மன நல மருத்துவர்களிடம் அனுப்புவார்கள். சரியாக வழி நடத்துவார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்