SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணி... அப்படி என்னதான் இருக்கிறது?!

2021-10-12@ 17:12:45

எந்தப்பருவத்திலும் பூக்கும் என்ற அர்த்தம் காரணமாக நித்ய கல்யாணி என்று தமிழில் பெயர் வந்தது. பெரும்பாலானவர்கள் ஓர் அழகுச்செடியாக இதனை வளர்த்தாலும் இலைகள், பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை. இதில் Vinblastine, Vincristine எனும் இரு முக்கிய உயிர் வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரு ஆல்கலாய்டுகளும் புற்றுநோயை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

சில வகை மார்பகப் புற்றுநோய்கள், தோல் புற்றுநோய்கள், நெறிகட்டியால் வரும் புற்றுநோய்கள் மற்றும் லுக்கேமியா, லும்போமா எனப்படும் ரத்த புற்றுநோய்கள் மற்றும் மூளைப்புற்றுநோய்க்கும் மருந்தாகப் பயன்படும் என்பதை நவீன ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது புற்றுநோய்க்காக மட்டுமல்லாமல் நித்யகல்யாணியின் வேரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் உலக அளவில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.

நீரிழிவு சிகிச்சைக்காக இதன் வேரை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். Serpentine, Reserpine, ஆல்கலாய்ட்ஸ் நித்யகல்யாணியில் இருப்பதால் ரத்த அழுத்த நோய்க்கும் நித்யகல்யாணி மருந்தாகிறது. தற்போது உலகம் முழுவதும் ஹெர்பல் பொருட்களின் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் நித்யகல்யாணி தாவரத்திற்கு மதிப்பு கூடியுள்ளது.

இதனால் மரபணு மாற்ற முறையில் எல்லா நிறங்களிலும் நித்யகல்யாணியை விளைவிக்கிறார்கள். மரபணு மாற்ற முறையில் விளைவித்த தாவரத்தில் எந்தவிதமான மருத்துவ குணமும் இருக்காது. வெள்ளை, வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும் இரண்டு நித்ய கல்யாணி தாவரம் மட்டுமே இயற்கையானது. முழுமையான மருத்துவப் பலனை அடைவதற்கு இந்த இரண்டு வகையை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

முதன் முதலில் 1960-ல் இதன்  மருத்துவ குணத்தை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கினோம். உலகிலேயே  அதிகம் ஏற்றுமதி செய்வது நம் நாடுதான். காரணம் இத்தாவரம்  வளர்வதற்கேற்ற தட்பவெப்பநிலை ஆசியாவில், அதிலும் குறிப்பாக  இந்தியாவில் அதிகமாக நித்யகல்யாணி தாவரம் வளர்கிறது என்பதே.  மேலும் இதற்கென தனிப்பட்ட பராமரிப்பு எதுவும் தேவைப்படுவதில்லை  என்பதும் இதன் சிறப்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்