SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவை வெல்ல உதவிய சீன பாரம்பரிய மருத்துவம்

2021-10-11@ 17:28:48

உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாயகமாகக் கருதப்படும் சீனா, அந்நோயின் கொடிய கரங்களில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டது. இதற்கு அந்நாட்டு மக்களின் கூட்டு முயற்சி ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களுடைய மருத்துவப் பாரம் பரியமும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அத்தகைய தனித்துவம் வாய்ந்த சீன மருத்துவத்தின் தனித்தன்மைகள் என்னவென்று நாமும் தெரிந்துகொள்வோம்!

* உலகின் பழமையான மருத்துவ முறை என கருதப்படுவனவற்றுள் சீன மருத்துவமும் முதன்மையானதாக திகழ்கிறது. ஏறக்குறைய 3,500 வருடத்துக்கும் முந்தைய வரலாற்றினைப் பின்புலமாக கொண்டது. 1950-ம் ஆண்டில் சீனா தன்னுடைய பாரம்பரிய மருத்துவமுறையை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்தது. மருத்துவ ஆய்வுகள், அறிவியல் நோக்கில் மீண்டும்மீண்டும் பலவிதமான பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்ட சீன மருத்துவம் அக்குபங்சர்(Acupuncture), மாக்சிபஸ்டின்(Moxibustion), துய் நா மசாஜ்(Tui na Massage), கிண்ண வடிவிலான கோப்பை மற்றும் உரசி தேய்த்தல் மூலம் தரப்படும் சிகிச்சைகள்(Cupping and Scraping), சீன மூலிகைகள்(Chinese Herbs), சீனஊட்டச்சத்து (Chinese Nutrition) என ஆறு பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.  

* பாரம்பரிய சீன மருத்துவத்தின்படி மனித உடலில் 2 ஆயிரம் அக்குபங்சர் பாயிண்ட் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இவை 12 முக்கிய ரேகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரேகைகள் நமது உடலின் மேற்பகுதி மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியவற்றிற்கு இடையே
ஆற்றலை இணைக்கிறது.இந்த சிகிச்சைமுறையில் தோலின் மேற்பகுதி, தோலின் கீழே உள்ள திசுக்கள் மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றில் ஊசிகள் செலுத்தப்படுகின்றன.
 
* நமது உடலில் ஓடுகிற ரத்தத்தை வெதுவெதுப்பாகவும், பலம் உள்ளதாகவும் வைத்துக்கொள்ளவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சிறுநீரகங்களை வலிமை உள்ளதாகவும் பாதுகாத்திட இச்சிகிச்சை பயன்படுகிறது. மாக்சிபஸ்டின் என்ற இந்த தெரபியில், மாசிபத்திரி(Mugwort) மூலிகையின் வேரை எரிப்பதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தை நலிவடைய செய்யும் காரணிகள் குணப்படுத்தப்படுகிறது.

* ஆசியக் கண்டத்தின் உடலியக்க தெரபியாக கருதப்படும் துய் நா மசாஜ் சீனாவில் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. மசாஜ், ஊசி மூலம் அழுத்துதல் மற்றும் உடலைக் கையாள்கிற பிற முறைகள் ஆகியவற்றின் கலவையாகக் கருதப்படும் இந்த சிகிச்சையில் நோயாளி நாற்காலியால் உட்கார வைக்கப்படுவார். பல கேள்விகளைக் கேட்டவாறு சிகிச்சையை ஆரம்பிக்கும் மருத்துவர் மூலிகை ஒத்தடம், ஆயின்மென்ட் போன்றவற்றை உபயோகிப்பார்.

* லவங்கப்பட்டை, இஞ்சி, ஜின்செங், ருபார்ப்(ஒரு வகை கிழங்கு) போன்ற மூலிகைகளின் இலை, வேர், தண்டு, பூ மற்றும் விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் சிகிச்சை தருகின்றனர். இவற்றில், ஜின்செங் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்