SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளை நோய் கால பாதுகாப்பு

2021-10-06@ 17:11:34

சில எளிய ஆலோசனைகள்

கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரம் பெருமளவு தணிந்துள்ளது. எனினும் நோயாளிகள் மருத்துவரை சந்திக்கவோ, மருத்துவமனைகளுக்குப் பயணித்து சிகிச்சை பெறவோ இன்னும் அச்சப்படுகின்றனர்.  நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் ஏற்பட்டால்கூட சிலர் புறக்கணிக்கின்றனர்.  இது தவறானது. மோசமான அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவரிடம் இணைய வழியாக ஆன்லைனிலும் தேவையான ஆலோசனையைப் பெறலாம். குறிப்பாக இதயக் கோளாறு நோய்க் குறி உள்ளவர்கள் இதில் அலட்சியம் காட்டக்கூடாது. கொரோனாவும் இதயமும் இதயத்தைப் பாதிக்கும் திறன் கோவிட்-19 கொள்ளை நோய்க்கு உண்டு என்பதை பல்வேறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கோவிட்-19 காரணமாக இதயத்தசைகளில் ஏற்படும் தொற்று ‘இதயத் தசை அழற்சி’யானது 10%-15% அளவில் பாதிக்கும். இது சாதாரணமாகவோ, கடுமையாகவோ மாறலாம்.

இவ்வகை நோயாளிகளுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. பல்வேறு தொற்றுக்கு காரணமாகும் கோவிட் கோவிட்-19 தொற்று பல்வேறு நோய்களுக்குக் காரணமாக உள்ளது. மூளையிலும், கால்களிலும், இதயத் தமனிகளிலும், ரத்த உறைவை அதிகரிக்கும்.  நிலைமை எதுவாக இருப்பினும் அச்சம் கொள்ளாமல் மருத்துவரை சந்தித்து, உடனடி சிகிச்சையை விரைந்து தொடங்க வேண்டும். வீட்டிலிருந்து அலுவலகப் பணி திடீரென ஏற்பட்ட கொள்ளை நோய்ப் பரவல் நமது பணியாற்றும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து அல்லது தொடர் வண்டியைப் பிடிக்கவோ, வாகனத்தைத் நிறுத்தவோ, அலுவலகத்தில் இங்குமங்கும் செல்லவோ, அலுவலகச் சிற்றுண்டி சாலைக்கு உணவருந்தவோ, அக்கம் பக்கம் கடைகளுக்குப் போகவோ நாம் மேற்கொள்ளும் சிறு நடைப் பழக்கங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் பணி முறை காரணமாகத் தெரிந்தோ தெரியாமலோ குறைந்துவிட்டது. பொது முடக்கம் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் அலுவலக முறை காரணமாக மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் உடலியக்கமும், உடற்பயிற்சியும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

 நீடித்த பணி நேரம் காலை நேர நடைப்பயிற்சியையும், மாலை நேர சைக்கிள் மிதிப்பையும் ஒதுக்கிவிட்டது.  இன்றைய வாழ்க்கைமுறை அதிக அலுவல் பணி, குறைந்த உடற்பயிற்சிகள் என்றாகிவிட்டது.  இதன் காரணமாக மற்றொரு முக்கிய அபாய அம்சமான மன அழுத்தம் அதிகரித்துள்ளது.  மன அழுத்தம் மாரடைப்புக்குக் காரணமாகிறது.  அதிக மன அழுத்தம் நீண்ட நேரம் நீடிப்பது இதயத்துக்கு ஆபத்து.  உங்களால் சுயமாக மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை என்றால் நிபுணர்களின் உதவியை உடனடியாக நாட வேண்டியது அவசியம்.
   
மன அழுத்தமளிக்கும் பணி என்றால் அழுத்தத்தை சிறப்பாகக் கையாளும் வகையில் உங்கள் வேலையை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்கப் புகை பிடித்தல், மது அருந்துதல், அதிகம் உணவு உட்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. இவை உங்கள் சமச்சீரான
இயல்பைப் புரட்டிப் போடுவதுடன் இதயக் கோளாறுகளுக்கும் வழி வகுக்கும். 40 வயதைத் தாண்டிய நிலையில் உங்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ, இல்லையெனில், முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே ஆரோக்கிய இதயத்தைப் பராமரிக்க முடியும். நம் இதயத்தைக் கவனிக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த 4-5 ஆண்டுகளில் மற்றுமொரு உயிர்க்கொல்லி கொள்ளை நோயாக இதய சுகாதாரப் பிரச்னைகள் அறிவிக்க வேண்டியிருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Thaipoosam

  ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்