SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவதிப்படுத்தும் மறதி

2021-10-04@ 17:33:59

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு கோடி பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வின்படி ஒவ்வொரு 3.2 வினாடிக்கும் ஒருவர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார். இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் பலருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வந்திருக்கிறது. கடுமையான பணிச்சுமை மற்றும் குடும்ப சூழல் மற்றும் சமூக ஆதரவு போன்றவை இல்லாத காரணத்தால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது.

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மற்றும் பிற மனம் சார்ந்த முக்கிய செயல்பாடுகளை அழிக்கும் ஒரு முற்போக்கான நோய் ஆகும். இது 3 வகையான மறதி நோய்களில் பொதுவான ஒன்றாக உள்ளது. இது மெதுவாகத் தொடங்கி படிப் படியாக முன்னேறி இறுதியில் மறதியை ஏற்படுத்தும். பெரும்பாலும் நினைவாற்றல் பிரச்னைகள் என்பது இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். இதன் காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம்.

பழக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் வழிகளைக்கூட மறக்கலாம், திட்டமிடுவதில் சிரமங்கள் ஏற்படலாம் மற்றும் சின்னச் சின்ன வேலைகளைக்கூட அவர்களால் செய்ய இயலாமல் போகலாம். முடிவெடுத்தல் மற்றும் தீர்மானிப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்படலாம். இந்த நோய் முற்றிய நிலையில் அறிவு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் இழக்கும் நிலை
ஏற்படும்.

மறதி  நோய் என்பது பொதுவாக வயதானவர்களிடம் காணப்படுகிறது. இதன் பாதிப்பு என்பது  இளைஞர்களிடம் வெகு அரிதாகவே காணப்படுகிறது. அல்சைமர், டிமென்ஷியாவானது காரணவியல் சுற்றுச்சூழல் மற்றும் உடல்ரீதியான காரணிகளால் ஏற்படலாம். இது மரபணு ரீதியாகவும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மற்றொன்று வாஸ்குலர் டிமென்ஷியா என்று சொல்லப்படுகிறது, இது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற் படும் குறைபாட்டால் நிகழ்கிறது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பக்க வாதம் ஏற்பட்டாலோ அல்லது சில குறிப்பிட்ட இடங்களில் பக்கவாதம் ஏற்பட்டாலோ அது வாஸ்குலர் டிமென்ஷியா என்னும் மறதி நோயாக இருக்கலாம்.

கடுமையான மனச்சோர்வு என்பது நினைவாற்றல், ஒருமுகப்படுத்துதல் மற்றும் அறிவுசார் திறன்களின் குறைபாடு காரணமாக ஏற்படலாம். உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கான தற்போதைய சிகிச்சை முறைகள் மருந்தியல் மற்றும் மருந்தியல் சாராதவை என இருவகையிலும் உள்ளன. நடத்தை மதிப்பீட்டு அளவீடுகளிலும் சில தனிநபர்களுக்கு நன்மை பயத்துள்ளது.

மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகள் ஆரம்ப கட்டங்களில் உதவும். அதற்கு பழங்கள் மற்றும் பாதாம் உள்ளிட்ட சத்தான உணவை எடுத்துக் கொள்ளுதல், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்தல், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றை செய்தால் மருந்து இல்லாமல் இதை குணப்படுத்த முடியும்.
மேலும் உற்சாகமான சூழல் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்கான சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த நோய் முற்றும் நிலை ஏற்பட்டால் அது குறித்து அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் டாக்டர் கலந்துரையாடுவது  மிகவும் அவசியம்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்