SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

FRESH DATES

2021-09-20@ 15:08:28

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான்.   

தற்போது ஆங்காங்கே தள்ளு வண்டிகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் Fresh dates அதிகம் விற்கப்படுகிறது. வழக்கமாக நாம் சாப்பிடும் உலர்ந்த பேரீச்சம்பழத்தில் கிடைக்கும் சத்துக்களுக்கும், Fresh Dates-க்கும் இடையே வேறுபாடுகள் ஏதேனும் உள்ளதா?

* செடியிலிருந்து புதிதாகப் பறிக்கும் பேரீச்சம்பழம் மஞ்சள் அல்லது வெளிர் சிவப்பு நிறத்திலும், மிகக் கடினமானதாகவும் இருக்கும். மிகவும் ஈரப்பதமான தட்ப வெப்பநிலைகளில் பேரீச்சை பழம் பயிரிடப்படுவதால், அவற்றில் சாறு நிறைந்து இருக்கும். இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அவற்றின் ஃப்ரஷ்னஸ் குறையாமல் நீண்ட காலம் பாதுகாக்க சாற்றைக் குறைத்தும், மிருதுவாக்கவும் காய வைத்தும் பதப்படுத்துவார்கள். அப்படி பதப்படுத்தும்போது நீர் வற்றி, தோல் சுருங்கி மற்றும் பழுப்பு நிறமாக மாறிவிடும். இதுவே நாளடைவில், பழுப்பு நிற, தோல் சுருங்கிய பேரீச்சையாக நமக்கு பழகிவிட்டது.

* கலோரிகளைப் பொறுத்தவரை உலர்ந்த பேரீச்சையின் கலோரி அளவு, Fresh dates-ஸை விட கணிசமான அளவில் அதிகமாக இருக்கும். எனவே, எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஃப்ரெஷ் டேட்ஸினை எடுத்துக் கொள்ளலாம்.  

*  மஞ்சள் பேரீச்சம் பழத்திலும், உலர் பேரீச்சையைப் போலவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. குறைந்த ஈரப்பதத்துடனிருக்கும் உலர்ந்த பேரீச்சையில் புதிய பேரீச்சம்பழத்தைவிட, ஊட்டச்சத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

*  வளரும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிக்குப் பதிலாக Fresh dates கொடுத்தால் எலும்புகளுக்கும் பலம் கிடைக்கும். அதே வேளையில் மூளை ஆற்றலையும் அதிகரிக்கும்.

* மாதவிடாய் நிற்கும் தருவாயில் உள்ள பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவைப்படும். இவர்களும் Fresh dates சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்