SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏற்கனவே கோவிட் வந்திருந்தால்...

2021-09-16@ 16:54:33

கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டவர்களின் உடல் நிலை சகஜ நிலைக்குத் திரும்ப குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். நோய் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு ஓராண்டு கூட ஆகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். அத்துடன் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதும் அவசியம்.

தொற்றிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவர். களைப்பு மற்றும் வறட்டு இருமலால் வலியும் ஏற்படும். நோய் தொற்று ஏற்பட்டபோது இருமியதால் ஏற்பட்ட சோர்வு மிகப் பெரும் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தியிருக்கும்.

வறட்டு இருமலை சமாளிக்க எளிய ஆலோசனைகள்

வறட்டு இருமல் நோயாளியில் தொண்டையில் மிகப் பெரும் அழற்சியை ஏற்படுத்தியிருக்கும். இது நோயிலிருந்து மீண்ட பிறகும் தொடரும். கொரொனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் பலர் தொண்டை வலியை அனுபவிக்க நேரிடும். இதை சமாளிக்க பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

* அடிக்கடி வெதுவெதுப்பான குடிநீர் பருகவும்
* ஒவ்வொரு முறையும் சிறு சிறு அளவாக தண்ணீரை விழுங்கவும்
* தொண்டையில் அரிப்பு ஏற்படுவதைப் போல உணர்ந்தால் சூடான பானங்களை மட்டுமே பருக வேண்டும்.
வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம். இது தொண்டைக்கு இதமளிக்கும்.
* தினசரி மூன்று முறையாவது நீராவி பிடிக்க வேண்டும். இது நுரையீரலில் சளி பிடிப்பதைத் தடுக்கும்.
* அறையைச் சுற்றி நடந்தால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

சோர்வை போக்க சில ஆலோசனைகள்

உடல் சோர்வு என்பது 6 மாதம் வரை நீடிக்கலாம்.  இதை சமாளிக்க முதலில் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். முழுமையான தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும். மன அழுத்தம் இருக்கக் கூடாது. தொடர்ந்து வைட்டமின் மாத்திரைகள் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஜிங் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

அதிக அளவில் பழச்சாறு, பால் உள்ளிட்டவை பருகுவதன் மூலம் உங்கள் தசை வலுவடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். புரதச்சத்து மிகுந்த உணவுகளையும், நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட காய்கறிகளையும் உணவில் உங்களது உடலில் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • wildfire-13

  கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

 • plane-crashe-13

  அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

 • wine-12

  இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

 • Tiruppp1

  திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

 • andhratirupp

  திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்