SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என் குழந்தைக்கு தடுப்பூசி போடலாமா?!

2021-09-13@ 17:01:15

கொரோனாவின் இரண்டாம் அலை சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை செப்டம்பரில் வரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் பரவலாக உள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிட்டத்தட்ட தயார்நிலையில் இருப்பது ஆறுதலான தகவலாகவும் உள்ளது.

2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை நடந்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 12ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்த பரிசோதனைகள் முடிந்து இன்னும் 2,3மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

டெல்லி எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்காக 6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்கெனவே 2வது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் 2வது டோஸ் கொடுக்கப்பட உள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியைத் தொடர்ந்து Zydus cadila நிறுவனத்தின் ZyCov-D என்ற தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்து அதன் முடிவுகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு 3 வாரம் கழித்து 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. இதுபோல ஐரோப்பிய நாடுகளில் மாடர்னா தடுப்பூசி 12 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி 12 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை நடந்து வருகிறது.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த பரிசோதனைகளும், தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பரிசோதனைகளில் தடுப்பூசியின் பாதுகாப்பு, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் உரிய அனுமதி பெற்றே பயன்பாட்டுக்கு வருகிறது. அதனால் குழந்தைகள் தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டியதில்லை. ஊசி போட்ட இடத்தில் வலி, சிவந்து போதல், வீக்கம் அல்லது காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தசைவலி, குளிர், உடல் சோர்வு போன்ற சில வழக்கமான பக்க விளைவுகள் ஏற்படக்க்கூடும்.

இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரசிட்டமால் மாத்திரை கொடுத்தாலே ேபாதுமானது. தடுப்பூசிகள் பெரும்பாலும் பாதுகாப்பானதாக இருப்பதோடு, கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. தற்போது இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளிலும், பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மூலமாகவும் 18 வயதுக்கு ேமற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும்போது, குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது. ஆன்லைனில் கல்வி கற்க முடியாத பல குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகியுள்ளது.

எனவே, பள்ளிகள் திறந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு செலுத்த அறிவியல் அறிஞர்கள், அரசு, மருத்துவர்கள் உள்ளி ட்ட அனைவரும் விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந் தொற்றில் இருந்து நம் குடும்பத்தினர் அனைவரையும் பாதுகாக்க குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுவதுமாக ஒழியவில்லை. எனவே குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் வரை அத்தியாவசிய தேவையின்றி குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற செய்வது அவசியம்.

கொரோனா தடுப்பூசியை என் குழந்தைக்கு போடலாமா என்ற அச்சம் பெற்றோருக்கு ஒருவேளை இருக்கக் கூடும். அப்படி சந்தேகம் இருப்பின் தங்களது குடும்ப நல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசி குறித்து முடிவெடுக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்