SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செரிமானம் இப்படிதான் நடக்கிறது…

2021-09-08@ 16:49:30

செரிமான வேலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வாய் உணவை வாயில் வைத்ததுமே வாயிலிருந்து செரிமான வேலைகள் ஆரம்பமாகிவிடும். நீங்கள் மென்று விழுங்கும் உணவானது, உணவுக்குழாய்க்குச் செல்லும். அங்கிருந்து வயிற்றுக்குச் செல்லும். அங்கிருந்து சிறுகுடலுக்குச் செல்லும்.

உணவிலுள்ள சத்துகள், சிறுகுடலின் சுவர்களால் கிரகிக்கப்படும். மீதமானது பெருங்குடலுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மலமாக வெளியேறும்.
பெயரில் சிறுகுடல் என்றாலும், பெருங்குடலைவிடவும் இதுவே நீளமானது என்றால் நம்புவீர்களா? ஆமாம். சிறுகுடலைப் பிரித்துவிட்டால் அது 20 அடிகள் நீளமிருக்கும். பெருங்குடலின் நீளம் வெறும் 5 அடிகள்தாம். அப்புறம் ஏன் இரண்டும் பெயர்களில் இந்த முரண்பாடு என்கிறீர்களா? அகலத்தைக் கணக்கில் கொண்டால் பெருங்குடல்தான் பெரியது. சிறுகுடல் குறுகலானது. அதனாலும் இருக்கலாம்.

அல்சர் ஏன் வருகிறது?

வயிறு தொடர்பான பாதிப்புகளில் பலரையும் பாதிக்கிற ஒன்று அல்சர் என்கிற புண். காரமான உணவு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் அல்சர் ஏற்படுவதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் அல்சர் பாதிப்பைத் தீவிரமாக்கக்கூடியவையே தவிர, அல்சரை ஏற்படுத்துபவை அல்ல.

உள்வயிற்றுப் பகுதியிலும், சிறுகுடலிலுள்ள டியோடெனம் என்கிற பகுதியிலும் புண்களை ஏற்படுத்துவதில் பாக்டீரியாவே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பகுதிகளைக் கேடயம்போன்று காக்கும் வழுவழுப்பான சுரப்பை அமிலங்கள் அரிக்கக் காரணமாக இருந்து, புண்களை ஏற்படுத்துவது இந்த பாக்டீரியாதாம். சாதாரண வலிகளுக்குக்கூட மருத்துவ ஆலோசனையின்றி அடிக்கடி வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வோருக்கும் அல்சர் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கழிவுகளை வெளியேற்றுவது கல்லீரலே!

செரிமானத்தில் பித்தப்பையின் பங்கும் முக்கியம். செரிமானம் என்றாலே அது வயிறும், சிறுகுடலும் சம்பந்தப்பட்ட வேலை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருப்போம். பித்தநீரின் மூலம் உணவிலுள்ள கொழுப்பு செரிமானமாக உதவுவது இதுதான். உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் கல்லீரலின் பங்கு முக்கியமானது. நீங்கள் உணவை உட்கொண்டதும், அதிலுள்ள சத்துகள் சிறுகுடலின் சுவர்கள் மூலம் கிரகிக்கப்படும்.

அங்கிருந்து சர்க்கரை, அமினோ அமிலங்கள், கிளிசரால், சில வைட்டமின்கள் மற்றும் உப்பு ஆகியவை ரத்தத்துக்கு எடுத்துச்செல்லப்படும். ஆனால் வெள்ளை அணுககளையும், நிணநீரையும் கொண்ட நிணநீர் அமைப்பு, கொழுப்பு அமிலங்களையும், வைட்டமின்களையும் கிரகித்துக் கொள்கிறது.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • cycle_sephiee1

  முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்