SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதய சிகிச்சையில் முப்பரிமாண முறை

2021-09-01@ 17:01:18

உலகளவில் இறப்பிற்கான காரணங்களை ஆராய்கையில், இதய நோய் பிரதான காரணமாக இருக்கிறது.  ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இதய வால்வு எனும் தடுக்கிதழ்கள் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் உபயோகிக்கப்படும் இதய வால்வானது உலோகத்தினாலோ அல்லது விலங்கின் திசுக்களைக்கொண்ட பயோப்ராஸ்தடிக்கினாலோ உருவாக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழிமுறையிலும் ரத்த உறைவு, வால்வின் செயல்பாடு தனது திறனை இழத்தல் போன்ற பிரச்னைகள் உள்ளன. மேலும் ரத்த உறைவை தடுக்கும் மருந்துகளை நீண்ட காலம் எடுப்பது போன்ற பல்வேறு சிக்கல்களும் குறைபாடுகளும்  உள்ளன. சமீபத்திய காலகட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மூலமாக முப்பரிமாண அச்சகம்(3டி முறை) எனும் நுட்பம் கொண்டு மேற்குறிப்பிட்ட அனைத்து குறைபாடுகளையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய இதய வால்வு சிகிச்சையினை மேற்கொள்ளலாம்.

முன்பு சிக்கலான அறுவை சிகிச்சைக்கான திட்டங்களை மேற்கொள்ள ஒரு உகந்த கருவியாக இதய நோய் நிபுணர்களால் கருதப்பட்டது இந்த முப்பரிமாண அச்சகம். இம்முறை இந்த முப்பரிமாண அச்சகம் வாயிலாக சிறப்பு பயோபாலிமர் கொண்டு இதயத்தில் நேரடியாக பொருத்தக்கூடிய இதய வால்வுகள் உருவாக்கும் முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது. இந்த புதிய முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட இதய தடுக்கிதழ்கள் பழைய சிகிச்சை முறையின் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளையும் எதிர்கொள்ளும் வகையில் இருக்கும்.

இதய தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலமாகவும் இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுவது யாதெனில் இவை நோயாளிகளின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் எடுக்கப்பட்ட இதயத்தின் முப்பரிமாண வடிவங்களை கொண்டு, தனிப்பயனாக கருதப்படும் முறையில் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் இவை நோயாளிகளின் ரத்த நாளங்களில் துல்லியமாக பொருந்தும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்