SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் கோவிட்

2021-08-02@ 17:08:05

கோவிட் தொற்றானது ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வந்த ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடானது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.விறைப்புத்தன்மை குறைபாடு என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சம்பந்தமான ஓர் அறிகுறியாகும். மோசமான உடற்பயிற்சி, போதுமான உடல் உழைப்பு இல்லாமை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் விறைப்புத்தன்மை குறைபாடு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ரத்த நாள பிரச்னைகள் காரணமாக பலருக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது. விறைப்புத்தன்மை ஏற்பட ஆண்குறிக்கு அதிகமான ரத்தம் தேவைப்படுகிறது. அங்கு ரத்தத்தை கொண்டு செல்வதற்கும் வெளியேற்றுவதற்கும் ரத்த நாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய நோயும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. விறைப்புத்தன்மை குறைபாடு என்பது நமது உடல் ஆரோக்கியம் மற்றும் இதய சம்பந்தமான பிரச்னைகளை வெளிக்காட்டும் ஒரு அறிகுறி.

கோவிட் பாதித்து குணமடைந்த ஆண்களிடையே இந்த குறைபாடு என்பது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்களே அதிகளவு கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த குறைபாடு என்பது பொதுவான ஒன்றாகும். இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக நாம் பார்த்து வருகிறோம். கொரோனா தொற்றானது விறைப்புத்தன்மை குறைபாட்டை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவற்றில் சில...    
          
* ரத்தநாள பிரச்னை

உடலில் உள்ள வாஸ்குலர் எண்டோடெலியல் செல்கள் இதயத்தில் இருந்து சிறிய ரத்த நாளங்கள் வரை முழு ரத்த ஓட்டஅமைப்பை வரிசைப்படுத்துகின்றன. இதன் பாதிப்பிற்கு சைட்டோகைன்கள் முக்கிய காரணமாக உள்ளன. இதனால் ரத்த உறைதல் பிரச்னை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆண்குறிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு உறையும்போது விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது.  
 
* இனப்பெருக்க செல்கள் குறைபாடு

டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனாது விறைப்புத்தன்மை மற்றும் கருவுறுதலுக்கான முக்கியமான ஹார்மோன் ஆகும். தற்போது கோவிட் பாதித்து குணமடைந்தவர்களில் இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

* இதய நோய்

இதய நோய் காரணமாகவும், இதய பாதிப்பு காரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ளும் மருந்தகளும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றன.
 
* நுரையீரல் பிரச்னை

நுரையீரல் சுவாசத்திற்கான முக்கியமான உறுப்பு ஆகும். இது ஆக்சிஜனை உள்ளே இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. நுரையீரல் திசுவில் குறைபாடு ஏற்பட்டால் அது ஆக்சிஜனேற்ற திசுவை பாதிக்கிறது. நைட்ரஸ் ஆக்சைடு  விறைப்புத்தன்மைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது அது விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும்.

* உளவியல் காரணங்கள்

கோவிட் நோய் பாதித்தவர்கள் உளவியல் ரீதியாக மனச்சோர்வடைகின்றனர்.  இதுவும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே இப்பிரச்னையை அலட்சியப்படுத்தாமல் அல்லது வெளியே சொல்லத் தயங்கி மருத்துவ உதவியை இழக்க வேண்டாம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்