SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயிற்றில் அசவுகரியம்…

2021-07-28@ 16:52:37

வயிற்றில் ஏற்படக்கூடிய ஒருவித அசவுகர்ய உணர்வுடன் வலியும், மலம் கழிப்பதில் மாற்றமும் இருக்கும். அதாவது அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல் இரண்டில் எதுவும் வரலாம். மலத்தின் தன்மையிலும் மாற்றம் இருக்கும். டீன் ஏஜ் முதல் நடுத்தர வயதுவரை பாதிக்கும் இந்தப் பிரச்சனையை இரிடபுள் பவல் சிண்ட்ரோம் என்கிறோம். உலக அளவில் 6 முதல் 18 சதவிகித மக்கள் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

வாழ்வியல் மாற்றம், உணவு முறையில் மாற்றம் மற்றும் மன அமைதியே  இரிட்டபிள் பவல்  சிண்ட்ரோமுக்கான சிகிச்சைகள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முழு
தானியங்கள், சிவப்பரிசி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதப்படுத்தும் பால் பொருட்கள், டீ, காபி, கார்பனேட்டட் பானங்கள், கஃபைன் மற்றும் ஆல்கஹால் நிறைந்த பானங்கள், காரம் மற்றும் மசாலா அதிகம் சேர்த்த உணவுகள், பொரித்த உணவுகள், நிறமூட்டிகள் நிறைந்த இனிப்புகள், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் வாய்வுத்தொல்லையை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்