SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமத்தை இளமையாக்கும் உணவுகள்

2021-07-26@ 17:18:58

நன்றி குங்குமம் தோழி

சருமத்தை இளமையாகவும், மினுமினுப்பாகவும், பளிச் நிறத்துடனும் வைத்திருக்க சில உணவுகள் அவசியம் தேவை.

*ஆப்பிள்: சிவப்பு நிற ஆப்பிளில்தான் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பாலி பீனால்கள் நம் சருமத்தை உறுதியாக வைக்கின்றன. சருமத்தில் ஐந்து மடங்கு அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

*மாதுளை: இதில் பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. வயதாகும்போது சருமமும் லேசாக சுருக்கம் பெற்று முதுமைத்தோற்றம் தருமே… அந்த மாற்றத்தை இவை தடுக்கின்றன.

*எலுமிச்சை: வடுக்கள், முகப்பருக்கள், கரும்புள்ளிகளின் தோற்றத்தைத் தடுக்கும் இயற்கை மருந்தாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நம் சரும செல்களில் இருக்கும் கொலாஜென்கள் என்ற புரோட்டீன்கள்தான் சருமம் சுருங்குவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தருகின்றன. இளமைத் தோற்றத்துக்காக கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லி க்ரீம்களிலும், இதற்காகப் போடப்படும் இன்ஜெக்‌ஷன்களிலும் கொலாஜென்தான் இருக்கிறது. எலுமிச்சைப்பழம் இந்த கொலாஜென்கள் இயற்கையாக உருவாக உதவி புரிகிறது.

*நெல்லிக்காய்: இதைப் பச்சையாகவும், ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். நெல்லிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலாஜென்கள் இயற்கையாக உருவாக இதுவும் உதவுகிறது.

*பசலைக்கீரை: சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை அகற்றும் நல்ல மருந்தாக செயல்படுவதால், சருமம் சுத்தமாகவும், பொலிவாகவும் காட்சி தர உதவுகிறது.

*பூசணி விதை: இதில் துத்தநாகம் நிறைந்திருக்கிறது. சருமத்தில் புதிய செல்கள் உருவாக்கம் பெற இதுதான் முக்கியத்தேவை. சருமத்தில் நிறைய எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்துவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.

*கேரட்: இதில் உள்ள பீட்டா கரோட்டின் பளீர் நிறத்தைத் தருவதோடு, முதுமையின் சுருக்கங்கள் விழாமல் தடுக்கிறது.

- இந்திராணி தங்கவேல், சென்னை.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

  • train-luxury-13

    இந்தியாவின் 5 பிரம்மாண்ட சொகுசு ரயில்கள்!: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் வசதிகள்..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்