SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை

2021-07-23@ 17:09:37

தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும். சுவை என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் ஒருவிதமான  தனி வாசனை இருக்கும். வெறுமனே சாப்பிடலாம். அல்லது அவலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது போல இதிலும் செய்து சாப்பிடலாம். தால் மக்கானி (தாமரை விதை பாயசம்)வட இந்தியாவில் பிரபலம். தாமரை விதையினை க்ரேவி போலவும் செய்து சாப்பிடலாம்.

இதில் கலோரி குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ள இதனை உப்பு சேர்க்காமல் நீரிழிவு நோயாளிகளும் ரத்த அழுத்தம் உடையவர்களும் மாலை நேரங்களில் நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது. எந்த பின்விளைவுகளும் இருக்காது. சிறுநீரகத்தின் திசுக்களை பாதுகாக்கும். எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் குறைக்கும். சீக்கிரம் வயதாவதை தடுக்கும்.   

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். வட இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களின் உணவில் இது கட்டாயம் இடம்பெறும். தால் மக்கானி என்று சொல்லும் இதனை அவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்