SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் இயக்கத்தை சீராக்கும் மல்லி!

2021-07-20@ 16:53:41

நன்றி குங்குமம் தோழி

கொத்தமல்லியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடல் ஆரோக்கியமாக இருக்க, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொத்தமல்லி கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

* வாதம் ஒரு பங்கு, பித்தம் அரை பங்கு, கபம் கால் பங்கு என நம்முடைய உடலில் இருக்க வேண்டும். இவற்றில் எது குறைந்தாலும், கூடினாலும் நோய் வரும். வாதம், உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. பித்தம், ரத்த ஓட்டத்தை சீராக்கும். கபம், உடல் வறண்டு போகாமல் வைத்திருக்க உதவும். தலை சுற்றல், வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மனஅழுத்தம், தூக்கமின்மை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றிற்கு காரணம் பித்தம். அதை கட்டுக்குள் வைத்திருந்தால், பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாது.

* உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

* கொத்தமல்லியின் கீரை, விதை இரண்டுமே மருத்துவப் பயன் கொண்டது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதை, 20 காய்ந்த திராட்சை, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, கஷாயமாக்கி குடித்து வந்தால், பித்தம் தணியும்.

* ஒரு மேஜைக்கரண்டி மல்லி விதையை, 500 மி.லி., தண்ணீரில் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள உலோக நச்சுகள் வெளியேறும்.

* மல்லி இலையை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் மற்றும் வாய்ப்புண் பிரச்னை இருக்காது.

* மல்லி விதையை வறுத்து, பொடித்து, தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால், வயிற்றுப்பிரச்னைகள் தீரும்.

* ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், கொத்தமல்லி சாறு பருகினால் குணமாகும்.

* மல்லி இலையையும், புதினாவையும் சம அளவில் எடுத்து, மிளகாய், புளி, தேங்காய், உப்பு சேர்த்து துவையலாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்