SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Ladies.. that three days?

2021-03-17@ 17:58:07

பெண்களின் மாதாந்திர அவஸ்தை மாதவிலக்கு. சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்...

* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம் இதனால் வயிற்றுவலி குறையும்.
 
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலை
யுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
 
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
 
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.  சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு
எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.  

* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்