SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்பிற்கு பகையாகும் உடல் எடை!

2021-03-01@ 18:02:43

நாற்பதை கடந்த பலர் மூட்டு வலிப் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள். நம்முடைய உடல் அன்றாடம் பல விதமான செயல்பாட்டினை மேற்கொள்கிறது. நாம் நடப்பதாலும், உட்காருவதாலும் மற்றும் உடற்பயிற்சி செய்வதாலும் நாளிடைவில் தசை மற்றும் எலும்புகள் வலுவிழந்து தேய ஆரம்பிக்கின்றன.

குறிப்பாக பெண்கள்... அவர்களின் உடல் அமைப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணத்தால் ஆண்களை விட அதிகமாக மூட்டு பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்கிறார் ஆல்சர்வ் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜகதீஷ் ராமமூர்த்தி. இவர் மூட்டு வலி குறித்து பிசியோதெரபி மற்றும் பயிற்சி முறைகளை அளித்து வருகிறார்.

மூட்டு வலி ஏற்பட காரணம்?

மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் ஆர்த்ரைடிஸ் பிரச்னை. எலும்பு மற்றும் தசைகள் பலவீனம் அடையும் போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. மகப்பேறு நிலையினை கடந்து வந்த பெண்களுக்கு  இடுப்பு எலும்பு பகுதிகளில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வயதானவர்களை பாதிக்கும் மற்றொரு பிரச்னை ருமடாயிட் ஆர்த்ரைடிஸ். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, மூட்டு, தசை நார்கள் மற்றும் இதர உறுப்புகளை பாதிக்கும். இதற்காக குறிப்பிட்ட காரணங்கள் இன்றும் கண்டறியப்படவில்லை என்றாலும், மரபணு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ருமடாய்ட் ஆர்த்ரைடிசால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வலி குறைய வழிகள்

வயதான காலத்தில் வலியை கட்டுப்படுத்தவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ முடியாது. ஆரம்பத்தில் இருந்தே இந்த பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* உடல் எடையை சீராக வைத்திருப்பது அவசியம்:


அதிக உடல் எடை உங்களின் மூட்டுகளை பதம் பார்க்கும். சில கிலோக்களை குறைப்பதால், உங்கள் கால் மூட்டுகளை அதிக காலம் பாதுகாக்க முடியும்.
உங்கள் எடையில் இருந்து 20% குறைந்தாலே வலி குறையும், சுறுசுறுப்பாக இருப்பீர்கள், உங்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.

குறைந்தபட்சம் அரை மணி நேரம் வாக்கிங், ஸ்விம்மிங், யோகா அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். சத்துள்ள ஆரோக்கியமான மற்றும் கலோரிகள் அதிகமில்லாத உணவுகளை சாப்பிடுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடந்து உங்களை ஆக்டிவ்வாக வைத்திருங்கள்.

* உட்காரும் தோரணையில் கவனம் :

நீங்கள் சரியான நிலையில் உட்காராமல் இருந்தாலும் அது உங்களின் மூட்டுகளை பாதிக்கும். உட்காரும் போது, நடக்கும் போது கூன் போட்டு இருப்பது போல் இருந்தால் இடுப்பெலும்பை பாதிக்கும். அதே போல் எடை அதிகமுள்ள பொருட்களை தூக்கும் போது, கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் கால் மூட்டு எலும்பில் பாதிப்பினை ஏற்படுத்தும். உட்காரும் போதும், நிற்கும் போதும் முதுகுத்தண்டு எலும்பு நேராக இருக்க வேண்டும். யோகா மற்றும் ஸ்ட்ரெசிங் பயிற்சிகள் செய்யலாம்.

* தசைகளை வலுவாக்க பயிற்சிகள்


தசைகள் வலுவாக இருந்தால், மூட்டு பிரச்னை ஏற்படாது. எதிக எடை பயிற்சி மேற்கொள்ளும் போபாது பயிற்சியாளர் உதவியுடன் கடைப்பிடிப்பது அவசியம். நீச்சல் மற்றும் ஆக்வா ஜாக்கிங் போன்ற பயிற்சிகள் மூட்டு பகுதியில் உள்ள தசைகளுக்கு வலு கொடுக்கும்.

* தண்ணீர் அவசியம்

நம்முடைய உடலில் உள்ள குறுத்தெலும்புகள் 65 - 80% தண்ணீரால் அமைக்கப்பட்டுள்ளது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் அது குறுத்தெலும்புகளில் இருந்து உறிஞ்சிக் கொள்ளும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால், எலும்பு மூட்டிகளில் உள்ள ஜவ்வுகள் இறுக்கம் ஏற்படாது. தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அவசியம். காபி, மது மற்றும் சோடா போன்ற பானங்களை தவிர்க்கவும். நீர்சத்துள்ள காய்கறி பழங்கள் மற்றும் சூப் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

* புகை எலும்புக்கு பகை

புகை பழக்கம் உள்ளவர்களுக்கு எலும்புகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்தை உடனடியாக விடமுடியாத பட்சத்தில், நாளிடைவில் குறைத்துக் கொள்வது அவசியம். புகை பழக்கத்தில் இருந்து உங்களை திசை திருப்ப உடற்பயிற்சி அல்லது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கினை கடைப்பிடிக்கலாம். ஆரோக்கியமான மூட்டு இயக்கம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று ஆலோசனை வழங்கினார் ஜகதீஷ் ராமமூர்த்தி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indonesia-deaths-5

  இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா...அதிகரிக்கும் மரணங்கள்...1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு..!!

 • train-acci-5

  செக் குடியரசில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 3 பேர் உயிரிழப்பு..50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

 • petrol,disel-4

  எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்