SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்பப்பையை குறிவைக்கும் எண்டோமெட்ரியோசிஸ்!

2021-02-16@ 16:48:50

‘‘ஒவ்வொரு மாதம் மாதவிடாய் போது பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு மெல்லிய தசை உறுப்பாகும். அதை எண்டோமெட்ரியம் என்று குறிப்பிடுவோம். அதையொட்டித் தான் கரு வளரும். கருத்தரிக்காத பட்சத்தில் இந்த தசை மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்காக வெளியேறும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு எண்டோமெட்ரியம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் கருத்தரிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் ரம்யா ஜெயராம்.

‘‘தற்போது பலர் மரபணு, உடல் பருமன் போன்ற பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு மாதவிடாய் போது ரத்தப்போக்கு மூலமாக வெளியேறும் சில அணுக்கள், வெளியேறாமல் மறுபடியும் உடலுக்குள் சென்று தங்குவதாலோ, அல்லது பெலோபியன் குழாய்க்கு வெளியே அல்லது கருமுட்டை மேல் தங்க வாய்ப்புள்ளது. கர்ப்பப்பையின் உடம்பில் தங்கும் அணுக்களை அடினோமயோசிஸ் என்று சொல்வோம்.

பொதுவாக கர்ப்பப்பையில் பைப்ராய்ட் கட்டிகள் இருந்தால் அது ஸ்கேன் செய்யும்போது தெரியும். ஆனால் இது அணுக்களாக தங்குவதால், கர்ப்பப்பையின் சுவர் வீங்க ஆரம்பிக்கும். அதன் அளவு பெரிதாகும். மாதவிடாயின் போது ரத்தப் போக்கும் அதிகமாக இருக்கும். இந்த அணுக்கள் கர்ப்பபையின் ெவளியே தங்கினால், அதை எண்டோமெட்ரியோசிஸ் என்று குறிப்பிடுவோம். இதனால் மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப்போக்கு நேரத்தில் கருமுட்டையில் இருந்தும் ரத்தம் வெளியாகும். நாளடைவில் கட்டியாக  மாறும். அதை சாக்லெட் சிஸ்ட்ன்னு சொல்வோம்.

இந்த பிரச்னை எல்லா வயதினருக்கும் ஏற்படலாம். முன்பு 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் இந்த பிரச்னை பரவலாக இருந்தது. தற்போது, 18 வயதில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

அறிகுறிகள்

* மாதவிடாய் பத்து நாள் முன்பு அடிவயிற்றில் வலி, மதுகு வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
* சிறுநீர் போகும்போது ஒருவித அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு.
* அடினோமயோசிஸ் பிரச்னை என்றால் மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். சிலருக்கு கட்டி கட்டியாக வெளியேறும்.

பொதுவாக இந்த பிரச்னை மாதவிடாயின் போது ஏற்படுவதால், மெனோபாஸ் காலம் அதாவது மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் அணுக்கள் தங்குவதும் அதிகரித்துக்கொண்டே போகும். கருமுட்டையின் எண்ணிக்கை குறையும். கர்பம் தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படலாம்.இந்த அணுக்கள் கர்ப்பபை மற்றும் கருமுட்டையில் மட்டுமில்லாமல் உடலில் குடல், சிறுநீர் மற்றும் நுரையீரலிலும் தங்கும். குடல் மற்றும் சிறுநீரில் தங்கும்போது மலம் கழிப்பதில் பிரச்னை ஏற்படலாம். இதனால் சிலருக்கு மலம் கழிக்கும் போது ஆசனவாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலும், மாதவிடாய் ஏற்படும்போது மீண்டும் அந்த அணுக்கள் உடலில் தங்க வாய்ப்புள்ளது. அதனை தடுக்க முடியாது. சிறுவயதில் இந்த பிரச்னை ஏற்பட்டால் மாதவிடாய் தள்ளி வருவதற்கும் மேலும் அந்த நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாக வெளியேறாமல் இருக்க மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். அணுக்கள் உடலில் சேரும் அளவு குறையும். கர்ப்பப்பையில் மிரேனா என்ற கருவியையும் பொருத்தலாம். பார்க்க காப்பர் டி மாதிரி இருக்கும். மாதவிடாய் ஏற்படாது, அல்லது ரத்தப்போக்கு குறைவாக இருக்கும். அணுக்கள் தங்குவதும் குறையும். மருந்து மற்றும் மிரேனா பொருத்துவதால், கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது.

சிறு வயது பெண்களுக்கு இந்த பிரச்னை இருக்கும் பட்சத்தில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் போது அவர்கள் செயற்கை முறையில் தான் கருத்தரிக்க முடியும்.
மிரேனா ஒருவரின் வயதிற்கு ஏற்ப பொருத்தலாம். ஒரு முறை வைத்தால் ஐந்து வருடங்கள் வரை பொருத்திக் கொள்ளலாம். மீண்டும் ஐந்து வருடம் கழித்து வேறு மாற்றி பொருத்தலாம். ஒரு கட்டத்தில் எந்த சிகிச்சை முறைகளாலும் கட்டுப்படுத்த முடியாத போது, இந்த பிரச்னைக்கான இறுதித் தீர்வு என்றால், கர்ப்பப்பை, மட்டுமில்லாமல் கருமுட்டை மற்றும் பெலோபியன் டியூப் அனைத்தையும் நீக்க வேண்டும்.

பொதுவாக மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி அவர்கள் பருவமடைந்த நாட்கள் முதலில் இருந்தே ஏற்படுவது இயல்பு. எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக ஏற்படும் வலி மாதவிடாய் நாட்கம் மட்டுமில்லாமல் முடிந்த பிறகும் இருக்கும். பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த பிரச்னை மாதவிடாய் நின்ற பிறகு முற்றிலும் குணமாகிவிடும். ரத்தப்போக்கு ஏற்படாது என்பதால், அணுக்களும் உடலில் தங்காது. அதுவரை சிகிச்சை மேற்கொள்வது அவசியம். எண்டோமெட்ரியோசிஸ் பொருத்தவரை எதனால் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. வாழ்க்கை முறை அல்லது உணவு பழக்கத்தில் ஏற்படும் மாற்றமும் காரணமாக அமையலாம்.

உடல் எடை அதிகரிப்பு அல்லது ஈஸ்ட்ரோஜென் அதிகரித்தாலும் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும் போது, உடல் எடை கூடும். அந்த சமயத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியும். அந்த சமயத்திலும் அணுக்கள் உடலில் தங்க வாய்ப்புள்ளது. இது தான் காரணம் என்று நாம் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால், உடல் ரீதியாக சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. வாழ்க்கை மற்றும் உணவு முறையில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியினை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது அவசியம்’’ என்று அறிவுரை கூறினார் மகப்பேறு நிபுணர் ரம்யா ஜெயராம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்