SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘எச்சரிக்கை’ இது குளிர்காலம்!

2021-01-20@ 17:44:23

நன்றி குங்குமம் தோழி

மழை, பனி என மாறி மாறி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜுரம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.

நோய்க்கான காரணங்கள்

* குளிர்காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.
 
* குளிர்காலத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது.

* குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் மூன்று மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை குலுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

நோய்களை தடுக்க

* அவ்வப்போது கை கழுவ வேண்டும்.

* பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள், லிக்வுட் போன்றவை பயன்படுத்தலாம்.

* மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.

* வைட்டமின் ‘சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை  அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

* தினமும் தேன் சிறிது குடித்து வந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

* பனியில் இருந்து தற்காத்துக்கொள்ள வெளியே செல்லும்போது காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளலாம். அல்லது குல்லா, மப்ளர் போன்றவை பயன்படுத்தலாம்.

* உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.

* ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.

* குளிர்பானங்கள் மற்றும் நீர்ச்சத்து காய்கறிகளை தவிர்க்கலாம்.

* கொதிக்க வைத்து, ஆற வைத்த சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.

இதனை பின்பற்றினாலே இந்த ஜில் கிளைமேட்டிலிருந்து தப்பித்து விடலாம்.

தொகுப்பு: ஜே.மாணிக்கவாசகம், சேலம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்