SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி!

2020-12-28@ 17:29:21

“தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லும் போது இருக்கும் உற்சாகம் அடுத்ததாக “சுகர் இல்லாம” என்று சொல்லும் போது கொஞ்சம் குறைந்து தான் போகிறது. மூன்று வேளை கூட சாப்பிடாமல் இருந்து விடுவோம். ஆனால் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு வேளை கூட தேநீர் அருந்தாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை... அந்த அளவிற்கு அடிமையாகும் நாம் சர்க்கரை வியாதி வந்த பின்னர் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிப்பதை மிகவும் சிரமப்பட்டு தான் ஏற்றுக்கொள்கிறோம்..

அது மட்டுமல்ல வெள்ளை சர்க்கரை  மெதுவாக கொல்லும் ஒரு நஞ்சு என்று தெரிந்தும் நம்மால் அதனை விட முடியவில்லை… சரி கருப்பட்டி, வெல்லம் என்று பண்டைய கால இனிப்பானுக்கு மாறலாம் என்றாலும் அவற்றை அனைத்து உணவு முறைகளிலும் சேர்க்க இயலவில்லை வியாபார ரீதியாக சில தொய்வுகள் உள்ளன...  இதற்கான  தீர்வை நம்மிடம் பகிர்கிறார் மதுரையைச் சேர்ந்த அருணா முத்துகிருஷ்ணன்…

‘‘பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்களில் முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் வெளியே செல்லும் போது தேநீரோ அல்லது வேறு ஏதேனும் குளிர்பானமோ சாப்பிட நினைத்தால் வெள்ளை சர்க்கரை கலந்து தான் கிடைக்கும். ‘இதற்கு மாறாக வேறு இல்லையா என்று வினவுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களுக்காகவே வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசியினால் தயாரிக்கப்படும் சர்க்கரை உள்ளது’’ என்கிறார் அருணா.

சீனித்துளசியால் (STEVIA POWDER) பதார்த்தங்கள், குளிர்பானங்கள் கூட தயாரிக்கலாம்’’ என்று கூறும் அருணா அதனை வேண்டுபவர்கள் இந்தியாவில் 30% மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவித்தார். ‘‘இவர்களை இணைக்கும் பாலமாக எங்களின் SMARDT INDIA வலைத்தளம் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத உணவுப்பொருட்களில் சர்க்கரை திணிக்கப்பட்டு வருகிறது. அதில் இருபத்தைந்து சதவீகிதம் சீனித்துளசியால் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

சீனித்துளசி என்பது ஸ்டீவியா STEVIA என்னும் தாவரம். எனது கணவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்,  அவர் சுமார் பத்து ஆண்டுகளாக  இந்த சீனித்துளசி மட்டுமே உபயோகிக்கிறார். அதனால் இன்று வரை சர்க்கரை நோயும் கட்டுக்குள் உள்ளது உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தற்போது எங்கள் குடும்பத்தில் அனைவரும் சீனித்துளசிக்கு மாறி விட்டோம்’’ என்றவர் அதற்கான சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.  ‘‘ஒரு முறை நாங்க குடும்ப சகிதமாக வெளியே சென்றபோது ஒரு உணவகத்தில் மில்க் ஷேக் சாப்பிட்டோம்.

நானும் எனது குழந்தைகளும் வெள்ளை சர்க்கரையில் செய்தது சாப்பிட, எனது கணவர் மட்டும் அவர் கையுடன் எடுத்து வந்து சீனித்துளசி சேர்த்து சாப்பிட்டார். ஆனால் என் குழந்தை மில்க்‌ஷேக்கை பாதி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்தனர். என் கணவரோ உணவை வீணாக்க வேண்டாம் என்று அதை சாப்பிட்டுவிட்டார். அவ்வளவு தான் அவருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகி உடல் உபாதைக்கு உள்ளானார். அந்த சம்பவத்திற்கு பிறகு வெள்ளைச் சர்க்கரைக்கு சீனித் துளசியை ஒரு மாற்றாக அமைக்க வேண்டும் என்பதில் நான் தீவீரமானேன்.

அப்படித்தான் சீனித்துளசியில் டீ தயாரிக்கும் அந்த தொழில்நுட்பத்தை நான் கண்டறிந்தேன். இன்றைக்கு சாலையோர டீக்கடையாக இருந்தாலும் சரி, ஸ்டார் ஓட்டல், லாட்ஜ் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களாக இருந்தாலும் அங்கே டீ இல்லாமல் இருப்பதில்லை. நமது அன்றாட உணவில் டீ மட்டுமல்லாது பல்வேறு உணவுப்பொருள்களின் வழியாகவும் இந்த வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள் சென்றடைகிறது. வெள்ளைச் சர்க்கரையில் சுரக்கும் லாக்டிக் அமிலம் நமக்கு பல வகையில் தீங்கு விளைவிக்ககூடியதாகும்.

ஆனால், சீனித்துளசியில் இந்த லாக்டிக் அமிலம் உற்பத்தியாவதில்லை. ஆகவே, சீனித்துளசி கலந்த டீ அருந்துவதால் நல்லதொரு ஆரோக்கியமான
எதிர்காலத்துக்கு வித்திடும். சர்க்கரைக்கு இணையாக இனிப்புச்சுவை கொண்ட இந்த சீனித்துளசியை (Stevia Leaf Extract) எல்லோரும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். 2030 ஆம் ஆண்டுக்குள், நூறு மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவார்கள். மேலும் இவர்களின் உடல் பருமன் பிரச்னையும் அதிகமாகும். இதை தவிர்க்க மக்களும் உணவுத்துறை நிறுவனங்களும் முழு மூச்சாக செயல்பட்டால் தான் வெள்ளை சர்க்கரை உணவு பதார்த்தங்களை தவிர்க்க இயலும்.

சீனித்துளசி இனிப்பினை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகள் போன்று நம் நாட்டிலும் இந்த சீனித்துளசியினால் செய்த பிஸ்கெட் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் இவற்றை உற்பத்தி செய்து அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  
வெளிநாடுகளில் இந்த வகை தயாரிப்புகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பும் உண்டு. இனிப்பு சுவைக்கான கருப்பட்டி, தேன் போன்ற இயற்கையின் படைப்பில் மற்றுமொரு படைப்பு சீனித்துளசி. வீட்டிலிருந்தபடியே தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் மாதந்தோறும் நிரந்தர வருமானம் கிடைக்குது” என்று நிறைவாக பேசி முடித்தார் திருமதி அருணா முத்துகிருஷ்ணன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்