SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலின் தேவை அறிந்து உடற்பயிற்சி செய்யலாம்!

2020-12-16@ 16:36:06

நன்றி குங்குமம் தோழி

உணவு ஆலோசகர் புவனா

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை… அதில் பலருக்கு ஒரே பிரச்னையாக இருப்பது உடல் எடை கூட்டுவது, குறைப்பது. அவ்வாறு எடை கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ இன்று பலர் கையில் எடுக்கும் ஆயுதம் யூ டியூப் வீடியோக்களின் ஆலோசனைகள். ஆனால், ‘‘இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது’’ என்கிறார் உணவு ஆலோசகர் புவனா.

சென்னை ராணி மேரி கல்லூரியில் Nutrition and Food Service Management-ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் புவனா, இப்போது ஜிம் மேனஜர் மற்றும் பயிற்சியாளராக மட்டுமில்லாமல், டயட்டீஷியனாகவும் பணியாற்றி வருகிறார்.  இதனோடு CFR PRO(Corrective Functional Resistance Professional Certification) தொடர்ந்து வருகிறார்.“உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கும், உடல் எடையைக் கூட்டுவதற்கும் கடைகளில் விற்கும் சப்ளிமென்ட் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை எடுக்கும் போது அந்த நபரின் உயரம், எடை, அவரின் வாழ்க்கை முறை போன்றவைகளுக்கு ஏற்றார் போல் எடுக்க வேண்டும். சராசரியாக ஒருவருக்கு, IBW (Ideal Body weight) அடிப்படையில் கிலோ ஒன்றிற்கு 0.8 - 1 கிராம் வீதம் புரதமும், 500 கிராம் கலோரியும் ஒரு நாளைக்கு பரிந்துரைப்போம். முதல் முறையாக வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு எடுத்த உடனேயே சப்ளிமென்ட் உணவுகளை பரிந்துரைக்க மாட்டோம். முடிந்த அளவு அவர்கள் உணவிலேயே அவர்களின் உடல் எடையை குறைப்பது அல்லது கூட்டுவது போன்றவற்றை மேற்கொள்வோம்.

பேச்சிலராக இருப்பவர்கள், பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்களுக்குச் சரியாக உணவு இருக்காது. ஓட்டல் மற்றும் ஹாஸ்டலில் கொடுக்கப்படும்
உணவுகளை தான் அவர்கள் சாப்பிடும் கட்டாயத்தில் இருப்பார்கள். அவர்களால் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளை சரியாக பின்பற்ற முடியாது. அவ்வாறு உணவுகளை எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நேரங்களில் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையும் சரிவிகித அளவில் எடுக்கணும்.

பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் மாமிசங்கள், பனீர், கீரை, காய்கறிகளிலேயே நமக்கு வேண்டிய சக்திகள் இருக்கிறது. இணை உணவுகள் எடுத்துக் கொள்பவர்கள் முக்கியமாகக் கவனம் கொள்ள வேண்டியது அவர்களுக்கு ஏற்கனவே வேறு உடல் பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதித்திருக்க வேண்டும். சிலருக்கு Lactose Intolerance பிரச்னை இருக்கும். அதாவது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இவர்களுக்கு ஒத்துக்ெகாள்ளாது.

அந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. அந்த பிரச்னை உள்ளவர்கள் நேரடியாகப் பால் சம்பந்தமான பொருட்கள் எடுக்காமல் அதற்குப் பதில் மாற்று உணவு எடுத்துக்கலாம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு எந்த விதத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம்” என்று கூறும் புவனா, யூ டியூப் சேனல்களில் உடல் ஆரோக்கியம் குறித்த வெளியாகும் வீடியோக்களை பின்பற்றலாமா? வேண்டாமா? என்பதையும் விளக்கினார். “ஒரு வாரத்தில் பத்து கிலோ வரை குறைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் உலக சுகாதார நிறுவனம், ஒரு மாதத்திற்கே 2.5 கிலோ தான் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. உடல் எடைக்காக உடற்பயிற்சி பண்ணுகிறோம் என்றால் 3 கிலோ கூட தாராளமாக குறைக்கலாம். எடை குறைப்பு என்பது எல்லோரும் எடையை மட்டும்தான் குறைக்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றம் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதே போல் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகள் எல்லாவற்றையும் சரியாகப் பார்த்து ஹார்மோன்சுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதுஅவசியம்.

சில பெண்களுக்கு பி.சி.ஓ.டி, ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருக்கலாம். இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான், யூ டியூபில் சொல்லப்படும் அறிவுரைகள் நமக்கு ஏற்றதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். உடல் எடையை கூட்டுவது, குறைப்பது ஆரோக்கியம் தான். அதற்காக உடனே அந்த மாற்றம் நிகழ்வதற்காக விளம்பரத்தை பார்த்து நாமாக ஒரு டயட்டை பின்பற்றவோ அல்லது சில பானங்களை குடிக்கவோ கூடாது. உங்க உடலில் நீங்களாக செய்ய விரும்பும் மாற்றத்தை டாக்டர் அல்லது சிறப்பு நிபுணரின் ஆலோசனையின்றி செய்யாதீர்கள்.

சிலர் பழங்கள் மட்டும் எடுத்துக்கிறேன் என்பார்கள். அது குறுகிய காலமாக இருக்கும் போது இது போன்று எடுப்பது தவறில்லை. ஏனென்றால் அல்சர், வாயு பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இது உகந்ததாக இருக்காது. சிலருக்கு இரவில் தூக்கம் சரியா இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டே தங்களது உடலுக்கு என்ன தேவையோ, அதை சாப்பிடுவது ரொம்ப ரொம்ப அவசியம்.

அதே வேளையில் சிலர் ‘நான் இதைச் செய்து பார்த்தேன்... நீங்களும் முயற்சி பண்ணுங்க’ என்றும் சொல்வார்கள். அங்கும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தன்மையாக இருப்பது போல், ஒவ்வொருவரது உடலும் ஒவ்வொன்றாக இருக்காது. எனவே நம் உடலுக்கு என்ன தேவை என்பதை தெரிந்து ெகாண்டு அதற்கேற்ற உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று  கூறும் புவனா, ஒரு பெண் குழந்தை எந்த வயதிலிருந்து ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதைக் கூறினார்.

“பதினான்கு வயதிற்குக் கீழ் உள்ளவர்களை ஜிம்மில் அனுமதிப்பதில்லை. ஆனால் அந்த குழந்தையும் நீச்சல், ஓட்ட பந்தயம், பூங்காக்களில் விளையாடுவது என்று விளையாட்டுகள் வழியாகவும் ஒர்க் அவுட் பண்ணலாம். அதுலேயும் எடை குறையும். சிறு வயதிலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளை நிறைய கொடுத்துப் பழகியிருப்போம். அதைக் குறைத்துக் கொண்டு அதற்குப் பதில் பயிர் வகைகளில் பல விதமான உணவுகளை ருசியாக சமைத்து கொடுக்கலாம். அப்படி உடற்பயிற்சி செய்ய அந்த குழந்தை விரும்புகிறது என்றால்எடை கொடுக்காமலேயே உடற்பயிற்சி செய்யலாம்.  

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக சில உடற்பயிற்சிகளை யூ டியூபிலோ, கூகுளிலோ, நண்பர்கள் பரிந்துரையிலேயோ செய்கிறார்கள். அதுவும் தவறான ஒன்று. ஏற்கனவே நல்ல உடற்பயிற்சி மேற்கொண்டு இருப்பவர்கள் மற்றும் ஃபிட்டாக இருப்பவர்களுக்கு இது பிரச்னையாக அமையாது. ஆனால் அவர்களும் கூட மருத்துவரின் ஆலோசனைப்படிதான் தங்கள் உடல்வாகிற்கு ஏற்றவாறு எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யணும்.  அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சுகப்பிரசவத்தை அச்சீவ் பண்ணலாம்” என்கிறார் உணவு ஆலோசகர் புவனா.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்