உடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி
2020-11-30@ 16:44:10

நன்றி குங்குமம் தோழி
உடல் எடை குறைப்பவர்கள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் மற்றும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எல்லாருக்கும் சிறந்த பயிற்சி உடற்பயிற்சி. ஜிம்மிற்கு சென்று தான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் 20 நிமிடம் கைகளை வீசி விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்து வந்தால் பல நன்மைகள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்...
*பாதங்களில் உள்ள தசைகள் வலிமையாகிறது.
*மலச்சிக்கல் ஏற்படாமல், உடலிலிருந்து கழிவுப்பொருட்கள் வெளியேறுகிறது.
*உடல் வடிவழகு பெற்று, தேவையில்லாத ஊளைச்சதைகள் மற்றும் கொழுப்பு குறைய உதவுகிறது.
*நினைவாற்றல் மிகுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
*கால்களின் விரல்களில், கால்களின் அடிப்பகுதிகளில் இரத்த ஓட்டம் பரவும். பித்த வெடிப்பு, ஆணி வருவதைத் தடுக்கும்.
*கூன் விழுவது தடுக்கப்படும். முதுமை வருவதைத் தள்ளிப்போடும்.
*திசுக்களின் தேய்மானம் குறையும். உடல் உறுதி பெறும்.
*இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
*பார்வையும், காது கேட்கும் திறனும் அதிகரிக்கச் செய்யும்.
*ஐம்புலன்களும் சீராக இயங்குவதால் நாள் முழுவதும் சோர்வின்றி இருக்கலாம்.
*எவ்வித மனஇறுக்கமும் மறையும்.
*இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும்.
*முதியவர்களுக்கு கால்சியம் சத்து குறைவதை தடுக்கும்.
*முக்கியமாக இதயத்திற்கு சுறுசுறுப்பு, உற்சாகம், அமைதி, மனநிம்மதி ஏற்படும்.
*நடைப்பயிற்சி மருந்தில்லா இயற்கை மருந்து; நடப்போம்; நோய்களை ஓட வைப்போம்.
தொகுப்பு: அ. திவ்யா, காஞ்சிபுரம்.
அட்டைப்படம்: அனு இமானுவேல்
மேலும் செய்திகள்
ஆர்த்ரைட்டிஸை அடித்து விரட்டுவோம்!
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் டார்க் சாக்லெட்
ஃபிரிட்ஜில் வைக்கும் காய்கறிகளின் ஆயுள் இரண்டு நாள்...
முரண்பாடான உணவுகள்!
உயிர் காக்கும் உணவுகள்
கர்ப்பப்பையை குறிவைக்கும் எண்டோமெட்ரியோசிஸ்!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!