SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிட்னி - இதயம் பத்திரம்

2020-11-18@ 16:40:29

நன்றி குங்குமம் தோழி

இதயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்கு கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும். ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக  72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும்.

தொடர்ந்து இயங்கி வரும் பணி நின்றுபோனால்... அசுத்த ரத்தம் தேங்கிடும். குளுக்கோஸ், தாது உப்புகள் தேவையான அளவு கிடைக்காது. புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படும் போது உயிரிழப்பு நேரிடும். இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம்.

* இடது புற மார்பு மற்றும் தோள்பட்டைப் பகுதியில் வலி
* தாடைப் பகுதியில் வலி
* மார்பு இறுக்கம்
* மூச்சு விடுவதில் சிரமம்
* படபடப்பு, மயக்கம், தசை வலி
* தலைசுற்றல்
* தொண்டை வலி
* உடற்சோர்வு
* தீராத இருமல்
* கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்
* குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

நாம் உயிர் வாழ இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல் நம் உடலில் இயங்கி வரும் சிறுநீரகமும் மிகவும் முக்கியமான உறுப்பு. உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. இதில் உள்ள நெப்ரான்கள் ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகின்றன.

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெற்று, உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்து... தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும். அதில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரகம் வெளியேற்றிவிடும். உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்ள சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டால், சிறுநீரகம் தன் பண்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் தாதுக்களையும் கூட சிறுநீரில் வெளியேற்றிவிடுகிறது. தற்போது சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்னோர் அபாயம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள். நீரிழிவு பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

* நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு அதிக அளவு தாகம் ஏற்படும். இதனால் அவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துவதால், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் அடிக்கடி ஏற்படும்.

* பசி அவ்வப்போது எடுக்கும்.

* அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைவு ஏற்படும்.

* உடல் சோர்வு, வாந்தி, தலைவலி ஏற்படும்.

* டைப் 1 நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு சிறுநீரை அடக்க முடியாத காரணத்தால் தூங்கும் போதே மெத்தையில் சிறுநீர் கழிக்க நேரிடும்.

* டைப் 1 நீரிழிவு ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படுத்தும்.

சிலருக்கு இது போன்ற எந்த அறிகுறிகளும் இருக்காது. அவர்கள் மற்றவர்கள் போல் சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நோயின் தாக்கம் அதிகரித்து அவர்களின் உயிரை பாதிக்கும் நிலை ஏற்படும்.இதயம் சிறுநீரகம் இரண்டிலும் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை பெதர் டச் தெரபி மூலம் குணப்படுத்த முடியும் என்று திட்டவட்டமாக கூறுகிறார் டாக்டர் பன்னீர் செல்வம்.

‘‘மருந்து மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை எதுவுமே அவசியம் இல்லை. தொடுதல் மூலமே அனைத்து விதமான இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். நோயாளிகளின்‌ உடலில்‌ குறைந்தது 10 முதல்‌ 20 விநாடிகள்‌ வரை எங்கள்‌ விரல்‌ படும். ஆனால் அதுவுமே அவர்களுக்கு தொடுகிறோம் என்ற உணர்வு இருக்காது. பட்டும்‌ படாமல்‌ தொடுவோம்‌. இதற்கான சிறப்பு டெக்னிக்‌ உள்ளது. இதற்கு பெயர்‌ தான்‌ பெதர்‌ டச்‌ முறை.

இந்த ட்ரீட்மென்ட்டை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால்‌ எல்லா விதமான நோய்களும் விரைவில்‌ குணமாகிவிடும்‌. டயாலிசிஸ் செய்து கொண்டு இருந்தவர், ஒரு கட்டத்தில் பிழைக்க வைக்க முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டு குணமாகாத அவரது சிறுநீரக பிரச்னையை எங்களின்‌ பெதர்‌ டச்‌ முறையால்‌ கட்டுக்குள்‌ கொண்டு வர முடிந்தது.

இப்‌போது அவர்‌ எந்தவிதமான பாதிப்பும்‌ இன்றி சந்தோஷமாக இருக்கிறார். இந்த தெரபி மருத்துவ துறையில் ஒரு பெரிய புரட்சி என்று தான் சொல்ல வேண்டும். நாங்க வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்து வருகிறோம். மனநலம்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கும்‌ இந்த தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முடியும்’’ என்கிறார்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ பன்னீர்செல்வம்‌.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-vaccine12

  கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்