கத்தியில்லாமல் கருப்பை கட்டியை கழிவாக வெளியேற்றலாம்!
2020-11-03@ 17:56:15

நன்றி குங்குமம் தோழி
கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் ஒரு விசேஷமும் இல்லையா என்று, இளம் தம்பதியரை பார்த்து வீட்டார் கேட்கும் கேள்வி தம்பதியினரை அப்படியே கூனிக் குறுக வைத்துவிடும். அப்போது ஆரம்பிக்கும் உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்களை நாடும் படலம். என்னென்ன பிரச்சனைகளில் எல்லாம் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது என்று பார்த்தால் பெரிதாக உருவெடுத்து நிற்பது கருப்பையில் உள்ள கட்டி. அதனை தொடர்ந்து பல கருப்பை பிரச்சனைகள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கும். இதற்கு தீர்வு சொல்கிறார் Dr. கௌதமன் B.A.M.S., மருத்துவ இயக்குனர் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை.
கருப்பை கட்டிகள் என்றால் என்ன?
கருப்பை கட்டிகள், கருப்பையில் வளரக்கூடிய கட்டி என்று அர்த்தம் இல்லை. பெண்களுக்கு வழக்கமாக மாதவிலக்கின் போது, மாதவிலக்கு கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். சில நேரங்களில் சின்ன துளி கழிவு வெளியேறாமல் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த துளியோடு மாதா மாதம், மீண்டும் மீண்டும் கழிவுத் துளிகள் தேங்கி கழிவு அதிகரிக்கும் போது கட்டியாக மாறி வருவது கருப்பை கட்டி என்கிறோம். யூட்ரேன் ஃபைபிராய்டு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பிரச்னை 35 வயது பெண்களில் சாதாரணமாக இருக்கிறது. இதனால் பெரிய பிரச்சனை என்பதெல்லாம் இல்லை. குழந்தைக்கு பிளான் செய்யும் போது தான் இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறது.
அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகள்
பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கு 28 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட வேண்டும். ஆனால், அது குறைந்து 20 நாட்களில் மாதவிலக்கு ஏற்படுவது, மாதத்துக்கு இருமுறை பீரியட்ஸ், மாதம் முழுவதுமே கொஞ்சம் உதிரம் காணப்படுவது, அதிக உதிரப்போக்கு இதெல்லாம் அறிகுறிகள். கருப்பை கட்டிகள் உருவாக முக்கிய காரணம் நம் உணவு முறை. அதனால் ஏற்படும் உடல் பருமன், மன ரீதியான அழுத்தம், சோர்வு, அன்றாடம் உபயோகப்படுத்தும் வேதியியல் பொருட்கள் என பல காரணங்களை குறிப்பிடலாம். இதற்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் அதிகப்படியான உதிரப்போக்கு, உடல் எடை அதிகரித்தல், மாதவிலக்கு நாட்களில் கடுமையான வயிற்று வலி, உடல் மற்றும் மனச்சோர்வு, எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவது, கண்களில் சோர்வு, வயிற்றில் தொப்பை பெரிதாக உருவெடுப்பது... இவைகள் எல்லாம் கருப்பை கட்டியினால் உண்டாகும் பக்க விளைவுகள்.
ஆயுர்வேத சிகிச்சையில் கட்டியைக் கழிவாக வெளியேற்றும் முறை
ஆயுர்வேதத்தில் கருப்பை கட்டியைக் கரைக்க சிறப்பான சிகிச்சை முறைகள் உள்ளன. யூட்ரேன் பைபிராய்டு எனப்படும் கருப்பை கட்டி ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருந்தது. இப்போது 20 வயது பெண்களில் ஆரம்பித்து மாதவிலக்கு நின்று போன பெண்களுக்கும் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. மாதவிலக்கு நின்று போன பெண்களும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், கட்டி கரைந்து கழிவாக வெளியேறிவிடும். கருப்பையில் கட்டி என்று உறுதியான பிறகு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து வயிற்றில் கருப்பையின் அளவு, கருப்பை கட்டியின் அளவு, எடை என்ன என்று பார்க்கலாம், கருப்பை, கரு முட்டைகளில் பிரச்சனை இருந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். கருப்பை தொடர்பான அத்தனை பிரச்சனைகளுக்கும் சிகிச்சை தரக்கூடிய சிறப்பு முறைகள் ஆயுர்வேதத்தில் இருக்கிறது.
ஆயுர்வேதத்தில் பஞ்சகர்மா சிகிச்சை என்கிற 5 அம்சத் திட்டம்!
ஐந்தாவதாக ரசாயன சிகிச்சை.
மேற்கண்ட 4 சிகிச்சைத் திட்டங்களையும் 6 மாத காலம் அல்லது ஒரு வருடத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்ட்ரா சவுண்ட் என்று சொல்லக்கூடிய அப்டமன் ஸ்கேன் செய்து அவ்வப்போது கட்டியின் தன்மையை அறிய வேண்டும். கடைசியாக கட்டி கரைந்து முழுமையாக வெளியேறி இருப்பதையும் இந்த ரசாயன சிகிச்சை மூலம் கண்டறிய முடியும்.
கருப்பை அறுவைசிகிச்சை
கருப்பையில் கட்டி இருக்கிறது என்று கருப்பையையே அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்பு ஏற்படலாம். தசையில் கொழுப்பு சேர்மானம், மன நிலை பாதிப்பு என மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் பிரச்சனைகள் இளம் வயதிலேயே வந்து சேரும்.
சிகிச்சைக்கான கால அவகாசம்
கருப்பை கட்டி முழுவதுமாக கரைந்து வெளியேற எவ்வளவு காலம் தேவை என்பது போன்ற கேள்விகள் வரலாம். சிலருக்கு 2 மாத காலத்தில் சரியாகிவிடும். சிலருக்கு ஒரு வருட காலம் கூட ஆகும். என்ன காரணம் என்று பார்த்தால், மருத்துவர் சொல்வதை சின்சியரா ஃபாலோ செய்யாமல் இருந்திருப்பார்கள். அதனால்தான் எப்போதும் ஒரு வருட காலத்துக்கு என்று மருந்து கொடுப்பதில்லை. முதல் 2 மாதம் மருந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் ஸ்கேன் செய்து கட்டியின் அளவை பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப மறுபடியும் மருந்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுட்கால நிவாரணம்!
ஆயுர்வேத மருத்துவத்தின் தாரக மந்திரம் அறுவை சிகிச்சை இல்லா குணம். எந்த வகை நோயாக இருந்தாலும் ஆயுட்கால நிவாரணம் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்..
மேலும் செய்திகள்
டயட்... நல்லதா? கெட்டதா?
குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!
கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா?
உளவியல் ஆரோக்கியம் அவசியம்!
ரத்தப் பரிசோதனையில் புற்றுநோயைக் கண்டறியலாம்
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி!
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்