SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமான மருத்துவ உபகரணங்களுக்கு...

2020-10-20@ 17:08:27

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் திருப்பூர் வால்ரஸ் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பிலும் தற்போது கவனம் ஈர்க்கிறது. ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கும் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவும் விதத்திலும் இந்த மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாராகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இது குறித்து திருப்பூர் வால்ரஸ் நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் கூறும்போது, ‘‘நமது நாட்டின் பல பகுதிகளில் இருந்து தரமான துணிகளை வரவழைத்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும், இந்த நகரத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு வசதிகளை உருவாக்கி தருகிறோம்.

இதன் காரணமாக அவர்களின் பொருளாதார நிலை மேம்பட உதவுகிறோம். மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி மற்றும் ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாரச் சந்தை வியாபாரிகள் கணிசமான லாபம் பெறும் வகையில், இளைய தலைமுறையினரின் விருப்பமான சாய்ஸ் ஆன, ரவுண்ட் நெக் மற்றும் காலர் வைத்த டி ஷர்ட், உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடையான லெக்கிங்ஸ், பாட்டியாலா, குர்தீஸ், ஷர்ட்ஸ், குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கான ஆயத்த ஆடைகள்(Readymade Dresses) போன்றவற்றை முதல் தரத்தில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

அத்தியாவசியத் தேவையான உடைகள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த எங்களுடைய நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது இன்றியமையாத மருத்துவ உபகரணங்களான பி.பி.ஈ. கோட்டுகள், N-95 முகக்கவசம்(Mask) தயாரிப்பில் இறங்கியிருக்கிறோம். ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு, வருமானம் இழந்த கம்பெனிகளுடன் இந்தப்பணியை இணைந்து செயலாற்றி வருவது மனநிறைவை அளிக்கிறது. மேலும் இவற்றை பெரியபெரிய நிறுவனங்கள், ஹோல்சேல், ரீட்டெய்ல் வியாபாரிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் முதலானவற்றிற்கு, லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூபாய் 300 மதிப்புள்ள பி.பி.ஈ. கோட்டுகளைச் சலுகை விலையில் ரூ.110 முதல் ரூ.150 வரை விற்பனை செய்து வருகிறோம்’’ என்கிறார்.

தொகுப்பு: வி. ஓவியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-12-2020

  02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்