SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!

2020-10-15@ 16:50:27

நன்றி குங்குமம் தோழி

* பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும்.

* ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது.

* பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.

* செல்களுக்கு ஆக்ஸிஜனை அளித்து, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

* இதில் உள்ள வைட்டமின் பி6 ஆக்ஸிஜனை ரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

* ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊற வைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* இதில் உள்ள வைட்டமின் ஈ, புற ஊதாக் கதிர்களால் தோல் பாதிக்காமலும், தோல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

* பிஸ்தாவில் உள்ள சியாசாந்தின், லூட்டின், கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையைப் பாதுகாக்கிறது.

* பிஸ்தா சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்ட எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கிறது.

* ஒரு கப் பிஸ்தா பருப்பில்  60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் சத்து அடங்கியுள்ளது.

தொகுப்பு: கவிதா சரவணன், திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்