SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூளையை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு!

2020-10-14@ 17:23:20

நன்றி குங்குமம் தோழி

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாடு என்பது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறது. காரணம் ஊட்டச்சத்து மற்றும் அதனால் ஏற்படும் உடல் நலம் இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பு பற்றி பலரும் இன்றுவரை அறியாமலே உள்ளனர்.
இத்தகைய மோசமான சூழ்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவரும் மனநல ஆலோசகருமான நீரஜ் ஜோஷி, வைட்டமின், ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக, நம்முடைய உடல் சரியாக இயங்குவதில்லை என்று குறிப்பிடுகிறார். அதோடு நின்றுவிடாமல், மூளை திறனும் பாதிக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை முன் வைக்கிறார். இது தொடர்பாக, அவர் முன் வைக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

‘‘இந்தியாவில், 70% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும், மனநலத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளாமல் உள்ளனர். மீதமுள்ள 30 சதவீதத்தினர் ஓரளவுக்கு ஊட்டச்சத்து - மனநலம் ஆகிய இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என்பதில் போதிய விழிப்புணர்வு கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒருபடி மேலே சென்று, உடல் நலம் - ஊட்டச்சத்து இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனக் கருதுகின்றனர்.     

பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். தினமும், மூன்று வேளை தவறாமல் உண்பது, முற்பகலான பதினொரு மணி மற்றும் மாலை நான்கு மணியளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மட்டும் உணவுப்பழக்கம் ஆகாது. மிகுந்த பசியுடன் இருத்தல், காலை அல்லது மதிய உணவைத் தவிர்த்தல், இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பண்டங்களைச் சாப்பிடுவதில் அளவுகடந்த விருப்பம் கொண்டிருத்தல் போன்றவையும் நமது உணவு முறையில் அடங்கும். இதன் காரணமாக, உடல் மற்றும் மூளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்படுவதற்குப் பயன்படுகின்ற முக்கிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்றவை சராசரியாக இருக்க வேண்டிய அளவைவிட, குறைவான
அளவில்தான் காணப்படுகின்றன.

வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு காரணமாக, உடலின் செயல்பாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.மேலும், மன நலத்தையும் பாதிப்பு அடையச் செய்து, மன அழுத்தம், அளவு கடந்த ஆவல்(Anxiety), மனப்பிறழ்வுகள் போன்றவற்றிற்கும் காரணமாக அமைகின்றது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு களின் முடிவில், எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த உதவும் கால்சியம் போன்ற சத்துக்களைப் பெறுவதற்கும், மன அழுத்தம், பல நாட்களாக நீடிக்கும் நோய்களுக்கும், வைட்டமின்-டிக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நவீனமான வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக அமைகின்றது. அலுவலகங்களில் பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், உடற்பயிற்சியின்மை, சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் ரசாயன அழகு சாதன பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட வழி வகுக்கின்றது. இரும்புச்சத்து குறைபாட்டால், ஆண்களைவிட, பெண்களே மன அழுத்தம் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சிவப்பு இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றில் இருந்து, தேவையான இரும்புசத்தைப் பெறலாம். சைவ உணவு சாப்பிடுபவர்கள் பீன்ஸ் போன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்ல பயன் தரும்.

நம்முடைய ஆரோக்கியத்துக்குத் தேவையான மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்-பி-யும் ஒன்று. இந்த ஊட்டச்சத்து சராசரியாக இருக்க வேண்டிய அளவில் இருந்து குறையும்போது, மன அழுத்தம் உட்பட எரிச்சல், சோர்வு முதலான பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன. ‘பி’ வைட்டமின் வரிசையில், பி6, பி12 மற்றும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் மறு உற்பத்திக்கு உதவுகின்ற ஃபோலேட் (Folate) ஆகிய ஊட்டச்சத்துக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது, மனம், உடல் நலம் சார்ந்து பல பாதிப்புகள் தோன்றுவதாக, இவ்வாய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.  

மக்னீசியம் குறைபாடு காரணமாகவும் நமது மனம் மற்றும் உடல் உறுப்புக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, தனிமை, ஏமாற்றம், விரக்தி, டென்ஷன் ஆகியவற்றால் ஏற்படுகின்ற மன அழுத்தம், அதன் காரணமாக, வருகின்ற உடல் நலப் பாதிப்புகள் முதலானவற்றை எளிதில் குணப்படுத்தலாம். இதற்கு சீரான இடைவெளியில் வைட்டமின்-டி, இரும்பு, மினரல்ஸ், மக்னீசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உள்ளதா என்பதை பொதுநல மருத்துவர் ஆலோசனையுடன் பரிசோதித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.  

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்