SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும்!

2020-10-14@ 17:06:13

நன்றி குங்குமம் டாக்டர்

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

மூன்றாம் மாதத்தில் தொடங்குக!

என்னடா இது… பற்களே முளைக்காத நிலையில், அதுவும் தாய்ப்பால் மட்டுமே புகட்டும் நிலையில் அவற்றை எவ்வாறு சுத்தம் செய்வது? மேலும் இந்த ஆரோக்கிய நடவடிக்கை தேவையா?’ என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில்... தேவை என்பதுதான். ஒவ்வொரு முறையும் பால் புகட்டிய பின்னர் சுத்தமான, கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில், மஸ்லின் போன்ற மெல்லிய துணியை நனைத்து, ஈறுகள் மற்றும் நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் மகள்/மகன் வளர வளர அவர்களைப் பிரஷ் பண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர சிரமப்பட வேண்டியதில்லை.  
 
முக்கியத்துவம் நிறைந்த முதல் பிரஷ் மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.
பற்பசையில் அலட்சியம் வேண்டாம்! உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
உணவும் பற்கள் ஆரோக்கியமும்!

உங்கள் ‘செல்லத்திற்கு’ ஆறு மாதம் முடிந்த பிறகு, இரவு நேரங்களில் பால் அருந்துவதை மெல்லமெல்ல மறக்கச் செய்து வேக வைத்த உருளைக்கிழங்கு, நன்றாக மசித்த வாழைப்பழம் போன்ற திட உணவுகளை அறிமுகப்படுத்த தொடங்கலாம். ஏனெனில், இரவு நேரத்தில் குழந்தைகளுக்குப் பால் புகட்டுதல் என்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல. எனவே, குழந்தைகள் ஒரு வயதை நிறைவு செய்யும்பட்சத்தில், இளம் தாய்மார்கள், இரவினில் மதர் ஃபீடிங்கைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு செய்வதால் படுக்கையில் உமிழ் நீர் சிந்துதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்படும். மழலையின் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்