SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...

2020-10-13@ 17:15:35

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா குழப்பமே இன்னும் முடிந்தபாடில்லை. பல நாடுகள் லாக்டவுன், தடுப்பு மருந்து முயற்சி என்று எண்ணற்ற சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புபோனிக் பிளேக் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனாவிலிருந்தே மீளாத நிலையில் சீனாவில் பிளேக் நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் உட்புற மங்கோலியாவில் இருந்து கடந்த நவம்பரில் வந்த 4 பேர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் நிமோனிக் பிளேக் நோய் உள்ளதாக ஆய்வறிக்கைகள் பதிவாகி உள்ளன. இவர்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் நோயால்(Bubonic plague) பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மர்மூட் எனப்படும் பெரிய ரக அணில், எலி போன்ற விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டதால் இந்த நோய் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆய்வறிக்கைகளை தொடர்ந்து இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறுதலான ஒரு விஷயம், புபோனிக் பிளேக் மக்களுக்கு எளிதில் பரவக்கூடியது அல்ல என்பது ஆறுதல். ஆனால், ஒரு சில நேரங்களில் புபோனிக் பிளேக்கின் பாக்டீரியா மனித நுரையீரலை அடையும்போது அது நிமோனிக் பிளேக்காக மாறுகிறது. இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு. அதனாலேயே இதனை Black death எனவும் திகிலோடு கூறுகிறார்கள்.

தொகுப்பு: இதயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்