SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்ப்பு சக்திக்கு எளிய வழிகள்!

2020-10-08@ 16:36:41

நன்றி குங்குமம் டாக்டர்

* கொரோனா வைரஸ் ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆறுதல் தரும் விஷயமாக நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்துக் கொண்டால் வைரஸ் தொற்றைத் தடுத்துவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார்கள் மருத்துவர்கள். நம் நாட்டைப் பொருத்தவரை சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் என மாற்று மருத்துவத்தில் இதுபோன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும் நிறைய தீர்வுகள் ஏற்கெனவே நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த பாட்டி வைத்தியத்தை இப்போது நினைவில் கொண்டு பின்பற்றினால் கொரோனாவை தடுத்துவிடலாம்...

* ஒரு லிட்டர் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடி, 4 டீஸ்பூன் தனியா, 1 கைப்பிடி துளசி இலைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை நன்கு கொதிக்க வைத்த பின்பு, வடிகட்டி கஷாயமாக குடிக்கலாம்.

* மசாலா மோர் தெரியுமா? அது வேறு ஒன்றுமில்லை. 500 மிலி மோரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 டீஸ்பூன் வெந்தயத்தூள், 1 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டால் அதுதான் மசாலா மோர். இதுபோல் மசாலா மோர் தயாரித்து, ஒரு நாளில் 2, 3 முறை வரையிலும் குடிக்கலாம்.

* 2 டம்ளர் தண்ணீரில் 4 சீந்தில் இலைகளைப் போட்டு, 1 டம்ளராக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து நாளொன்றுக்கு 2, 3 முறை குடிக்கலாம்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் 100 கிராம் வெந்தயம் போட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை தலை, உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் வரை ஊறவைத்து குளிப்பது மிக அவசியம்.

* ஒரு லிட்டர் தண்ணீரில் 4 அல்லது 5 மிளகு, வெற்றிலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொண்டு, நாள் முழுவதும் தண்ணீருக்குப் பதில் இதை குடிக்கலாம்.

* கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, சோப்பும், கிருமிநாசினியும் கொண்டு கை கழுவது முக்கியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அது கடைகளில் கிடைக்காத இந்த அவசர நேரத்தில் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறது. நம் முன்னோர்கள் சொன்ன இயற்கை கிருமிநாசினி வேப்பிலை, மஞ்சள். இதற்கு நிகர் வேறொரு கிருமிநாசினி இருக்க முடியுமா? ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கொத்து வேப்பிலை, 1 ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து நல்ல வெயிலில் காயவைத்து வீட்டின் முகப்பில் வைத்துவிடுங்கள். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது, கை, கால்களை இந்த தண்ணீரால் கழுவிக்கொண்டு உள்ளே வருவதால், நோய்க்கிருமிகள் நம்மை அண்டவே அண்டாது. வீட்டிற்கு வருபவர்களையும் இதை பின்பற்றச் சொல்லலாம்.

* ஒரு டம்ளர் பாலில் 4 டம்ளர் தண்ணீர், 3  பூண்டுப் பற்கள் போட வேண்டும். 1 டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடிக்கலாம். காபி, டீ க்கு பதிலாக இந்த பானத்தை இரண்டு, மூன்று முறை குடிக்கலாம்.

* இஞ்சி, பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காயம் இந்த நான்கும் ஒரு வீட்டின் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும். இதை சட்னி, சாம்பார், உப்புமா, சாம்பார் என எல்லா உணவுகளிலும் வழக்கத்தைவிட, அதிகமாக சாப்பிட்டு வருவதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

* வழக்கமாக குடிக்கும் மோருடன் 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து விழுதாகச் சேர்த்து குடிக்கலாம்.

* எளிதில் கிடைக்கக்கூடிய சீசன் காய்கறிகள், நம் ஊரின் பழங்களை வாங்கி சாப்பிடுங்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருட்களை முடிந்தவரையில் தவிருங்கள். நமக்கு எளிதில் கிடைக்கும் நம் ஊர் உணவுப்பொருட்களில்தான் ஊட்டச்சத்து மிகுந்து இருக்கும்.

* வைட்டமின் ‘சி’ நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை, பனங்கற்கண்டு, கருப்பட்டி ஏதாவது ஒன்றை சேர்த்து சாறாக குடிக்கலாம். நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சுவைக்காக தேன், பட்டைத்தூள் சேர்த்து குடிக்கலாம்.

* பருப்பு ரசத்திற்கு பதிலாக, பூண்டு, இஞ்சி சீரகம் மற்றும் மிளகு சேர்த்த ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிப்ஸ், பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக அரை கப் மாதுளை முத்துக்களுடன், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.

* கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து துவையலாக சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

* தயிரில், வெங்காயம், சிறிது கொத்தமல்லி, புதினா இலைகலைச் சேர்த்து தயிர்பச்சடியை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

* முளைகட்டிய பச்சைப்பயறுடன் எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள் சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிடுங்கள்.

* வழக்கமாக குடிக்கும் மோருடன் 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து விழுதாகச் சேர்த்து குடிக்கலாம்.

* இப்போது தர்பூசணிப்பழம் நிறைய கிடைக்கிறது. தர்பூசணியை துண்டுகளாக்கி, அதன்மீது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.

* வளர்சிதை மாற்றமும் உடலின் நோயெதிர்ப்புத் தன்மைக்கு முக்கியம் என்பதால், சாப்பிட்ட உணவு முழுவதும் செரித்து பசியெடுத்த பின்பே, அடுத்த உணவை சாப்பிட வேண்டும்.

* முட்டைக்கோஸை சூப்பாக செய்தும், முட்டையின் வெள்ளைக்கருவை வேக வைத்தும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

* இரவு வேளையில் பழங்கள், காய்கறி சாலட் போன்று எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும், நல்ல உறக்கமும் இந்த நோய்க்காலத்தில் அவசியம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்