SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் காக்கும் இயற்கை மருத்துவம்!

2020-10-06@ 16:50:57

நன்றி குங்குமம் தோழி

மிளகு, இஞ்சி, மஞ்சள், பூண்டு, சோம்பு, சீரகம்... இவை இல்லாத தென்னிந்திய உணவுகளை நாம் சமைக்க முடியாது. எல்லா உணவுகளிலும் ஏதாவது ஒரு ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை நாம் சேர்க்க தவற மாட்டோம். நம் முன்னோர்களால் பழக்கப்பட்ட இந்த உணவு முறைகளை தான் நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். உணவு ஒரு பக்கம் நம்மை காத்து வந்தாலும், மறுபக்கம் காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளுக்கும் நம்மிடம் உள்ள மூலிகைகளே அதற்கான தீர்வுகளாக அமைந்தன.

குறிப்பாக தற்போது நிலவி வரும் கொரோனா காலத்திலும் இந்த மருந்துகள் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க மிகவும் உதவி வருகின்றன. உலகமயமாக்கப்பட்ட காலங்களில் நம் பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்ட அஞ்சறைப்பெட்டியில் அடங்கி இருந்த நாட்டு மருத்துவத்தை நாம் மறந்தே விட்டோம். இப்போது அதற்கு மறுபடியும் டிஜிட்டல் முறையில் ஆப்கள் மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. அவை என்ன? அதன் மூலம் நாம் எவ்வாறு பலன் அடையலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

சித்தா மெடிசன்

‘உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!’ என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பிப்பது தான் சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் நம் உடலில் மெதுவாக செயல்பட்டாலும், அதன் தாக்கம் நீண்ட காலம் இருக்கும் என்பதால், நம்மை பல வித ேநாய்களில் இருந்து காத்துக் கொள்ள உதவுகிறது.

இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்த சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகள் இந்த ஆப்பில் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்து, நோய்கள் வரும் முன் உடலைக் காத்துக் கொள்ளுங்கள்.

பாட்டி வைத்தியம்

இன்று நம்மால் ஒரு காய்ச்சல், தலைவலியை கூட தாங்க முடியவில்லை. உடனே மருத்துவமனைக்கு செல்கிறோம், அல்லது அருகில் இருக்கும் மருந்துக்கடைக்கு சென்று ஒரு மாத்திரை வாங்கி   போட்டுக் கொள்கிறோம். அப்போது தான் காய்ச்சல், உடல்வலி குணமாகிறது. ஆனால் அன்றைய காலத்தில் இது போன்ற மருத்துவமனைகளோ அல்லது மருந்து கடைகளோ இருக்காது. ஒரு கிராமத்திற்கு என்று வைத்தியர் இருப்பார். அல்லது நம் வீட்டிலேயே வயதானவர்கள் அவர்களின் அனுபவத்தில் பாட்டி மருத்துவம் செய்வார்கள்.

நம்மில் எத்தனை பேர் அந்த வைத்தியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டு வந்திருக்கிறோம். சொல்லப்போனால் அந்த வைத்தியம் குறித்து யாருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. இனி அந்தக் கவலை வேண்டாம். முக்கிய பாட்டி வைத்திய குறிப்புகள் இந்த ஆப்பில் உள்ளது. இந்த குறிப்புகளை நாம் பயன்படுத்துவது மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் அதனை பகிரலாம். இந்த ஆப் முழுக்க முழுக்க இலவசமாக செயல்பட்டு வருகிறது. உங்கள் கைபேசியில் இதனை டவுண்லோட் செய்து, அவ்வப்போது அது பற்றிய குறிப்புகளை அதில் நோட்டிஃபிகேஷனாக பெறலாம்.

நாட்டு மருத்துவம்

நாட்டு மருத்துவம், நம் முன்னோர்கள் கடைபிடித்த வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் அல்லது கிராமத்து வைத்தியத்தின் ஒரு தொகுப்பு. இதில் நமக்கான பிரச்னை என்ன என்று குறிப்பிட்டால் போதும், அதற்கான வைத்தியங்கள் பற்றிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம். அனைத்து வீட்டு அடுப்பாங்கரையில் உள்ள பொருட்கள் என்பதால், அதை தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் உள்ள குறிப்புகளை மற்றவர்களுக்கும் அனைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரும் வசதியும் உள்ளது. இதில் உள்ள குறிப்புகள் எல்லாம் சித்தவைத்திய நிபுணர்கள், ஆயுர்வேத நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சித்தா மெடிசன்

சித்தா மருத்துவம் இந்தியாவின் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தைப் போலவே, சித்தாவும் இந்தியாவில் தோன்றிய ஒரு பாரம்பரிய மருத்துவம். தமிழ் சித்தா மெடிசன் ஆப்பில் சாதாரண உடல் ரீதியான பிரச்னைகளுக்கு வீட்டில் இருந்தே என்ன மருத்துவம் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை மேற்கொள்வதால், எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. காரணம் அனைத்துமே இயற்கை சார்ந்த மருத்துகள். இவை நம் உடலுக்கு வலிமையை ஏற்படுத்தும்.

மேலும் இதில் ஒரு மருத்துவம் பற்றிய குறிப்பு இருந்தாலும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்துகள், அதன் பலன்கள் என அனைத்தும் தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டில் வழங்கப்பட்ட அனைத்து சித்தா மருந்து தீர்வுகளும் தமிழகத்தின் முன்னணி சித்தா நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தவை. உடனே தமிழ் சித்தா மெடிசன் பயன்பாட்டினை உங்கள் கைபேசியில் டவுண்லோட் செய்து பலன் அடையுங்கள். இயற்கைக்கு மாறுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்!

உணவே மருந்து

நாம் சாப்பிடும் சாப்பாடே ஒரு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று சொல்லலாம். நாம் பயன்படுத்தும் மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தயம், பூண்டு, இஞ்சி... அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை அனைத்தையும் நம் முன்னோர்கள் உணவில் சேர்த்து வந்ததால் தான் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

நாம் தற்போது அதனை மறந்து விட்டு துரித மற்றும் வெளிநாட்டு உணவுகளுக்கு மாறிவிட்டோம். அதனால் பல விதமான உடல் உபாதைகளை சந்தித்து வருகிறோம். தற்போது இந்த ஆப்பில் நம்முடைய பாரம்பரிய தமிழ் உணவுகள், வைத்திய முறைகள், உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. நம்முடைய பிரச்னை என்ன என்று குறிப்பிட்டு அதன் மூலம் ஆரோக்கியத்தை கடைபிடித்து வளமாக வாழலாம்.

தொகுப்பு: கார்த்திக் ஷண்முகம்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்