SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவே மருந்து - நைட்ரேட் உணவுகள்!

2020-09-08@ 16:43:53

நன்றி குங்குமம் டாக்டர்

கீரை வகைகள், பீட்ரூட்,  பச்சைப்பசேல் காய்கறிகள் ஆகியவற்றில் நைட்ரேட்(Nitrate) என்ற உப்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், இளம்வயதில் ஏற்படுகிற விழிப்புள்ளி சிதைவைக்(Macular degeneration) கட்டுப்படுத்த முடியும் என்று Journal of the Academy of Nutrition and Dietetics இதழில் ஆய்வு கூறியிருக்கிறது.

தவறாமல் சாப்பிட வேண்டிய தர்பூசணி!

கோடைக்காலம் தொடங்கியதும், இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் கனிகளில் தர்பூசணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்தக் காலத்தில் நமக்கு ஏற்படுகிற நா வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தோல் வறண்டு போதல் ஆகிய பாதிப்புக்களைச் சரி செய்ய தர்பூசணி பயன்படுகிறது. மேலும் மரபணுவைப் பாதுகாக்கக்கூடிய Lycopene என்ற வேதிப்பொருளும் இதில் கணிசமான அளவில் உள்ளது. கண்கள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றை பலப்படுத்துகிற வைட்டமின்களான ஏ,சி போன்றவையும் சீசன் பழமான தர்பூசணியில் இருப்பது என்பது முதுமைப்பருவத்தினருக்கு அரிய வரப்பிரசாதம். அசைவ உணவு வகைகளா... நன்றாக சமைப்பது அவசியம்!

அசைவ உணவு பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. சிக்கன் ஆபத்து, மீனில் கலப்படம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி கலவரப்படுத்தும். ஆனால், அப்படியெல்லாம் அச்சப்பட வேண்டியதில்லை என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். தரமான அசைவமா என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும், அதனை முறையாக சமைப்பதிலும் அக்கறை காட்டினாலே போதும். எந்த வைரஸும் நம்மை பாதிக்காது என்றே ஆறுதல் தருகிறார்கள்.

தொகுப்பு: ஓவியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்