SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாயை மூடி பேசவும்..

2020-06-29@ 17:13:04


நன்றி குங்குமம் டாக்டர்

தகவல்


மாஸ்க் பயன்பாடு என்பது இப்போது அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. மாஸ்க் இல்லாமல் வெளியே நடமாடினால் வழக்கு பாயும் என்கிற அளவுக்கு சட்டப்பூர்வமான விஷயமாகவும் மாறிவிட்டது. எனவே, மாஸ்க் பயன்பாட்டில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

துணி மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க், என் 95 மாஸ்க்... முகம் பிரிண்ட் செய்யப்பட்ட மாஸ்க், டிரான்ஸ்பிரண்ட் மாஸ்க், உடுத்தும் உடைக்கு ஏற்ப அணியும் மாஸ்க், மூலிகை மாஸ்க், யு.எஸ்.பி கேபிளை வசதியுடன் இணைத்து தயாரிக்கப்பட்ட மாஸ்க் என பல விதமாகத் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியும்போது எலாஸ்டிக் இல்லாமல், நாடாவால் தைக்கப்பட்டதை அணிவது நல்லது. மாஸ்க்கினை அதிக நேரம் அணிவதால் காதில் வியர்வை சேர்ந்து அதனால்கூட தொற்று ஏற்பட வாய்ப்புகள் அமையலாம். சிலருக்கு கன்னத்தில் அலர்ஜி போன்று தோன்றுவதாகவும் கூறுகின்றனர். தலையின் பின் பக்கம் அல்லது கழுத்தில் கட்டக்கூடிய எளிதாக அவிழ்க்கக் கூடியதாக பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

மாஸ்க் அணியும்போது இரு பக்கம் இருக்கும் காதுகுழியைப் பயன்படுத்தி அணிய வேண்டும். கழட்டி பயன்படுத்தி  கொள்ள வேண்டும். இதை தவிர்த்து வேறு எங்கும் தொடாமல் அணிவதும், கழற்றுவதும் நல்லது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்த வேண்டிய முகக்கவசத்தை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது.

மாஸ்க் அணிந்த பிறகு நம்மையே மறந்தும்கூட சில வேலைகளில் வேறு எங்காவது கைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டு, மீண்டும் முகக் கவசத்தின் மீது தொடுவோம். இதுபோல் முககவசத்தை அடிக்கடி தொடுவதையோ, சரியாக அணிந்திருக்கிறோமா என்று தொட்டு பார்த்து ஆராய்வதையோ தவிர்க்க வேண்டும்.

மாஸ்க் பயன்பாட்டில் அதை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டியதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கழட்டியதும், அருகில் இருக்கும் மூடிய குப்பைத்தொட்டியில் மட்டுமே போட வேண்டும். கண்ட இடங்களில் வீசி எறியக் கூடாது.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்கள் மாஸ்க் அணிந்துகொள்வதைத் தவிர்க்கலாம். ஏனெனில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். புகைப்பழக்கம், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் மாஸ்க் அணிவதும் தவிர்க்க வேண்டிய பழக்கமே. வீட்டில் தனியே இருக்கும்போதோ, தனியே காரில் பயணம் செய்யும்போதோ மாஸ்க் அணிய வேண்டியதில்லை.

சுத்தமான மாஸ்குகளை மட்டுமே அணிய வேண்டும். துவைத்து வெயிலில் காயவைத்த மாஸ்குகள்தான் பயன்படுத்த வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க்கானது பச்சை மற்றும் நீல நிறத்தில் பார்த்திருப்போம். மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தி வருவர். அவற்றையும் பயன்படுத்தலாம். சுகாதாரப் பணியாளர்களுக்கு அவை தேவைப்படும் என்பதால் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மாஸ்க் அணியவதன் காரணம், நம் வாயிலிருந்து வெளி வருகிற நீர்த்துளிகள் பிற இடத்தில் பரவாமல் தடுக்கவும் நம்மிடம் இருக்கும் தொற்று பிறருக்கு பரவி விடக்கூடாது என்றுமே அணியப்படுகிறது. ஆனால், மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்பது இன்னும் நிரூபணமாகவில்லை. அதனால், மாஸ்க் அணிந்தாலும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியம்!

ரெஸ்பிரேட்டரி மாஸ்க்(சுவாச மாஸ்க்)கில் வைரஸைத் தடுப்பதற்கான ஃபில்டர்ஸ் மற்றும் காற்றை பிரிப்பதற்கான (வடிகட்டிகள்) உள்ளன. காற்று மாசு, வைரஸ் மற்றும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் நமக்கு பாதுகாப்பு பெறுவதற்காக இதனை பயன்படுத்துகிறார்கள். என் 95 மாஸ்க்கும் ரெஸ்பிரேட்டரி மாஸ்க் போன்றதுதான்.

N95 மாஸ்க்கின் உள்புறம் இருக்கும் அதன் வடிகட்டிகள் மாசடைந்தால் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சரியாக சுத்தம் செய்யாமல் மீண்டும் அணிந்துகொண்டே இருப்பதால் உடலுக்கு குறைந்தளவு ஆக்சிஜனே கிடைக்கும். இதனால் மூளைக்கும் ஆக்சிஜன் குறைந்து மூளையின் செயல்திறன் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.

- அ.வின்சென்ட்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்