SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா?!

2020-06-09@ 10:30:40

நன்றி குங்குமம் டாக்டர்

அழகு சாதன பொருட்கள் முன்பு திரைப்படக்கலைஞர்களாலும், உயர் நவநாகரிக மேட்டுக்குடி மக்களாலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. இன்று நவநாகரிக காலத்தின் போக்கால் அனைவராலுமே பயன்படுத்தக் கூடியதாகிவிட்டது. ஏன் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் குழந்தைகளுக்கு அழகுசாதனங்கள் பயன்படுத்துவது தேவையா?!

பொதுவாக குழந்தைகளுக்கான அழகு சாதனங்களைப்(Children’s make up kit) பயன்படுத்த இரண்டு விதமான காரணங்கள் உள்ளது. பெற்றோர் பயன்படுத்தும் அழகு சாதனங்களை பார்த்து குழந்தைகள்  பழகிக் கொள்கிறார்கள். மற்றொன்று ஊடகங்கள் மூலமாக அழகுசாதனம் பற்றி தெரிந்துகொண்டு அதேபோன்று ஒப்பனை செய்தும் கற்றுக் கொள்கின்றனர். கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இத்தனை அலங்காரம் தேவையில்லை. தவிர்க்க முடியாத நிலையில் எந்த மாதிரியான அலங்கார பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுதான் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியிலும் தேவைப்படுகிறது.

ரசாயனம் கலந்த அழகு சாதனங்கள் அலங்கார பொருட்கள், வணிகரீதியாக பார்க்கும்போது நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக Preservatives கலக்கப்படுகிறது. Parabens, PBA, phthalates, Coal ther போன்ற ரசாயனம் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதால் சருமம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. நெயில் பாலிஷில் Toluene போன்ற பெட்ரோலிய By-products சேர்க்கப்படுகிறது. அதை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு சில எதிர்பாராத உடல்ரீதியான பிரசனைகளுக்கு ஆளாக நேரிடலாம். நரம்பியல் சேதம், மூளை செயல்பாடு குறைவு, சுவாசத்தில் குறைபாடு, காது கேளாமை, குமட்டல் ஆகிய குறைபாடுகளுக்கு ஆளாக நேரிடலாம்.  

Synthetic dyes, Talc போன்ற பவுடர் மாதிரியான அழகு சாதனத்தின்மீது விழிப்புணர்வு வாங்கி தரும் பெற்றோர்க்கும் அதை பயன்படுத்தும் குழந்தைகளுக்கும் தேவைப்படுகிறது. சிலர் லிப்ஸ்டிக்கில் Heavy metals பயன்படுத்துகிறார்கள். இதில் Lead என்பது மிக கொடிய நச்சுத்தன்மை உள்ளது.  லெட் பயன்படுத்தும்போது மூளை, எலும்புகளை பாதிக்கும். ரத்தசோகை, வலிப்பு மற்றும் உள்ளுறுப்புகளை கூட பாதிக்கும். நிக்கல்(Nickel) போன்ற ரசாயனம் கலந்த பொருட்களும் விற்கப்படுகின்றன. இதேபோல் Mascara eye liner, Shimmer duster, Glitter powder பயன்படுத்துவதும் குழந்தைகளின் எழில் மேனிக்கு எதிரானதுதான். Shimmer glitter போன்ற ரசாயனம் கலந்த பொருட்கள் பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உள்ளிருக்கப்பட்டு நுரையீரல் அலர்ஜி  மற்றும் வீஸிங் வர வாய்ப்பிருக்கிறது.

Asbestos, Talwin மற்றும் Heavy metals உடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தும்போது ஹார்மோன்களில் தொந்தரவு ஏற்படுத்துவதால் பல மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். புற்றுநோய் கூட வர வாய்ப்பிருக்கிறது. பெரியவர்கள், பிறந்த குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் Kajal என்ற கண் மை நெற்றியிலும், கன்னத்திலும், கண் இமையிலும் வைப்பர். அதனால் கண் பெரிதாகும் என்ற நம்பிக்கையையும் முன் வைப்பர். ஆனால், காஜல் முற்றிலும் நச்சுத்தன்மை உள்ளதாகும். கண் எரிச்சல், அரிப்பு, கண் தொற்று கூட ஏற்படலாம். மேலும் கண்ணீர் துவாரங்களில்(Dears hole) அடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிக அதிகம். சில பெற்றோர்கள் நாங்கள் Kajal, பாதாம் பருப்பு கொண்டு  இயற்கையான முறையில் தயாரிக்கிறோம் என்பார்கள். அதிலும் கூட கார்பன் இருப்பதால் நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கும் எனவே, பயன்படுத்துவதும் நல்லது அல்ல.

அப்படி கண்டிப்பாக காஜல் பயன்படுத்த விரும்பினால், காதுக்கு பின்னால் பொட்டாக வைக்கலாம். பாதத்தின் உள் பகுதியில் வைக்கலாம். அதுவும் சிறிதாக சருமத்தில் வைத்து பரிச்சோதனை செய்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதாவது தடவிய இடத்தில் சிவப்பு நிறமாக மாறும், அரிப்பு ஏற்படும். கண்ணுக்கு பக்கத்தில் மையிடவே கூடாது. குளிக்க வைக்கும்போது காஜல் தண்ணீரில் கலந்து மூக்கு வழியாக குழந்தைகளின் கண், மூக்கு பகுதிக்கு சென்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைகளின் கண்களில் அரிப்பு மற்றும் சிவந்துபோக வாய்ப்பிருக்கிறது. கண் பெரிதாகும் என்பதற்காக இதை எல்லாம் நம் முன்னோர்கள் செய்வர். அப்படி செய்வது தவிர்க்க வேண்டும், இல்லை எனில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஆபத்தாக முடியும்.  

பொருட்களின் ரசாயனக் கலப்பினை கண்காணிக்க Food and drug administration(FDA) என்ற அமைப்பு இயங்கிக் கொண்டு இருந்தாலும், நேரடியாகவே மிக அதிக நுட்பமான சருமத்தில் பயன்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களும் பரிசோதிக்கப்படுவதில்லை. அதுவும் குறிப்பாக இதுபோன்ற ரசாயனம் கலந்த எல்லா பொருட்களுக்கு கண்காணிக்காதது, ஒரு பெரும் பின்னடைவாகவும் இந்தியாவில் கருதப்படுகிறது. குழந்தைகள் மேக்கப் போடாமலேயே அழகாய்தான் இருக்கிறார்கள் என்பதை பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், குழந்தைகள் சருமம் மிகவும் மென்மையானது. அவ்வாறு, குழந்தைகள் அழகு சாதனம் பயன்படுத்த வேண்டும் என்று அடம் பிடித்தால் இந்த கலப்பு மாதிரியான ரசாயனம் இல்லாத(Organic) அழகு சாதனங்களை பயன்படுத்தலாம்.

பெற்றோர் அழகு சாதன பொருட்கள் வாங்கும்போது No Parabens, No talwin, No synthetic என்று குறிப்பிட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். Water based and Washable வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இயற்கை அழகு சாதனமாக இருந்தால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் Coconut oil paste, Argan oil, Shea better, Bees wax, Almond oil, Organic oil ஆகிய அழகு சாதனங்கள் பயன்படுத்துவதால் அதிக பின் விளைவுகள் வராமல் தடுக்கலாம்.

தொகுப்பு: அ.வின்சென்ட்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்