SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஸ்டண்ட் உற்சாகத்துக்கு..

2020-06-09@ 10:29:47

நன்றி குங்குமம் டாக்டர்

இளைய தலைமுறையினருக்கு எதுவும் உடனடியாக கிடைத்து விட வேண்டும்; அதுவும், உற்சாகம் கிடைப்பதில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது. இன்ஸ்டன்ட் காஃபி போல், உற்சாகமான உள்ளமும் உடனடியாக கிடைத்து விட வேண்டும் என நினைக்கின்றனர். அத்தகைய மனப்பான்மை கொண்டோருக்காகவே, உற்சாகமான மனநிலையைப் பெறுவதற்கு எளிமையான நான்கு டிப்ஸ் இதோ...

பழைய உணர்வுகளைப் பதிவு செய்வது...

எதிர்பார்ப்பு மனப்பான்மையை காரணமாக, நீங்கள் பாதிப்புக்குள்ளானால் அதற்கேற்றவாறு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு உங்களுடைய பழைய உணர்வுகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய வேண்டும். மேலும், அன்றாடம் உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதன் பின்னர், கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி, கார் அல்லது டூ வீலர் ஓட்டுதல், சிறிது நேர தூக்கம், மசாஜ் செய்து கொள்ளல் போன்றவற்றின் மூலம் எதிர்பார்ப்பு மனப்பான்மை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

தோற்றத்தை அலங்கரிப்பது...

தற்போது என்ன மாதிரியான நிலைமை உள்ளது என நினைத்து கொண்டிருக்க வேண்டாம். வீட்டில் இருந்தவாறே, ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால் உடனடியாக உங்களுக்குப் பிடித்த ஆடையை அணிந்துகொள்ளுங்கள். ஸ்பா சீசன் என சொல்லப்படுகிற ஆரோக்கியமான நீருற்றுக்கும் பேக்கேஜ் முறையில் நீங்கள் செல்லலாம். ஏனெனில், திடீரென உங்களை மூழ்கடிக்கும் அளவிற்கு தோன்றும் எதிர்மறையான உணர்வலைகளை நீந்தி கடக்க வேண்டியது இருக்கும். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் உங்களுடைய தனித்திறமைகளில், 20 சதவீதத்தைக்கூட பயன்படுத்த முடியாதவராக நீங்கள் இருக்கின்றீர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மன அழுத்தமான நேரங்களில் உங்களை நீங்களே அலங்காரம் செய்துகொள்வது முக்கியம்.

தூக்கத்தில் புத்துணர்வு பெறுவது...

இக்கட்டான நேரங்களில் சோர்வு நம்மைப் பற்றிக்கொள்கிறது. கடினமான வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை நம்மை தூக்கத்தை இழக்க வைக்கிறது. இதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு நாமே போதுமான நேரத்தைக் கொடுப்பது இல்லை. எனவே, உறக்கம் உங்களுக்குத் தேவையாக உள்ளது.உங்களுடைய சோகம் மற்றும் கோபம் பெரும்பாலும் விலகிச் செல்ல தொடங்கி இருக்கும். அதன் காரணமாக, உங்களுடைய சரீரத்துக்கு முழு ஓய்வு தேவைப்படும். கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டாலே உற்சாகம் உங்களை உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.

கடின முயற்சிகளைத் தவிர்ப்பது...

‘கடின முயற்சி வேண்டாம்’ என்பது எதிர்மறையாக உள்ளதே என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்காமல் இல்லை. ஆனால், Psychological science என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவுகள், சந்தோஷமான மனநிலையைப் பெறுவதற்குப் பகீரதனப் பிரயத்தனம் செய்யத் தேவையில்லை என்றே கூறுகிறது. எந்தவொரு இலக்கையும் மனதில் கொண்டு கடினமாக முயற்சி செய்யும்போது, அது மனதளவில் பின்னடைவையே ஏற்படுத்தும். அதனால், சூழல் சரியில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால் தற்காலிகமாக முயற்சிகளை நிறுத்தி வையுங்கள்.

இந்த பட்டியலுடன் பிடித்த உணவுகளை சாப்பிடுவது, பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவது, பொழுதுபோக்குகளில் மனதை திருப்புவது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்