SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளுக்கும் வரலாம் சிறுநீர்த்தொற்று

2020-06-09@ 10:28:22

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக Urinary Tract Infection என சொல்லப்படும் சிறுநீர் பாதையில் நோய்தொற்று முதியவர்களைப் பாதிக்கும் நோய் என்பதுதான் பெரும்பாலோரின் எண்ணம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த நோய்க்கு எந்த வயது வித்தியாசமும் இல்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்துள்ளது. சிறுநீரக அமைப்பில் பல பாகங்கள் உள்ளன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பாதை என இதில் எந்த பாகத்திலும் நோய் தொற்றும் அபாயத்தையே சிறுநீர்ப்பாதை தொற்று என்கிறோம். போதுமான தண்ணீர் அருந்தாதது, பிறப்புறுப்பை சுகாதாரமாக பராமரிக்காதது போன்றவற்றினால் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படுகிறது.

UTI என சுருக்கமாக சொல்லப்படும் இந்த பிரச்னை, அறிகுறிகள் வெளியே தெரியாத வகையில் உடலில் காணப்படும். என்னவென்று விவரிக்க முடியாத காய்ச்சல் அல்லது குளிர், எரிச்சல் மனப்பான்மை, வாந்தி மற்றும் பேதி போன்றவை இதற்கான அறிகுறிகளாக உள்ளன. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது வயிற்று வலி முதலான அடையாளங்கள் தோன்றும். இவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தைகளுக்கு இந்த அறிகுறி இருக்கும்பட்சத்தில் முதலில் குழந்தைகள் நல மருத்துவரிடமே ஆலோசனை பெறலாம். UTI உறுதி செய்யும்பட்சத்தில், குழந்தைகள் நல மருத்துவர் சிறுநீரைப் பரிசோதிக்க பரிந்துரைப்பார்.

குழந்தையின் சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்படுவதற்கு முன்னால், ஒரு வேளை ஆன்டி-பயாடிக் தரப்பட்டால் அக்குழந்தைக்குச் சிறுநீர் பாதையில் நோய்தொற்று இருப்பதாக நெகடிவ்வான பரிசோதனை முடிவுகள் வெளியாகும். இதன் காரணமாக, சிறுநீரகங்களில் தென்படும் வடு பல நாட்களாக நீடிக்கும். சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படும். முக்கியமாக பெண் குழந்தைகளின் சிறுநீரக அமைப்பில் எந்தவித முரணும் இல்லாமல், சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றால் அவதிப்படலாம். ஆனால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தொற்று இருக்கும்பட்சத்தில், அல்ட்ரா சவுண்ட் மூலம் சிறுநீர் பாதையைப் பரிசோதிக்கலாம்.

இவ்வாறு வயிற்றுப்பகுதியையும் பரிசோதிக்கும்போது, அக்குழந்தைக்குப் பிறவியிலேயே சிறுநீர் பாதையில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஒரு சில குழந்தைகளுக்கு அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம் பெறப்பட்ட ரிசல்ட் அடிப்படையில், அவர்களுடைய சிறுநீர் பாதையை மதிப்பீடு செய்ய, டி.எம்.எஸ்.ஏ. அல்லது Micturating Cystourethrogram டெஸ்ட் உட்பட பலவிதமான பரிசோதனைகள் தேவைப்படும். இத்தகைய பரிசோதனைகள் மூலம், சிறுநீர் பின்னோக்கி வழிதல், சிறுநீரகங்களில் வடு போன்றவை உறுதி செய்யப்படும். இதுபோன்ற பாதிப்பு உடைய சிறுமிகளுக்கு மருத்துவரின் நேரடி கண்காணிப்பு ஓரிரு ஆண்டுகளுக்குத் தேவைப்படும்.

தொகுப்பு: விஜயகுமார்

உணவு மாற்றம் உதவி செய்யும்!

சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் அவதிப்படும் சிறுவர், சிறுமியரை முழுமையாக குணப்படுத்தும் வகையில், சிகிச்சைகள் உள்ளன. அவற்றில், ஆன்டி-பயாடிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உணவுப்பழக்கமும் UTI பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தொடர்பாக, தைவான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஏறக்குறைய ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடைய உடல்நலம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்தல், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. ஒன்பதாண்டு காலம் நடைபெற்ற இவ்வாய்வின் முடிவில், பங்கேற்றவர்களில் 16% சைவ உணவுப்பழக்கத்தால், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்