SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெர்மல் ஸ்கேன் செய்வது என்ன?!

2020-06-03@ 12:08:07

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா அச்சம் காரணமாக பல இடங்களிலும் பரிசோதிக்கப்படும் உபகரணமாக தெர்மல் ஸ்கேனரைப் பார்த்து வருகிறோம். இதன் உண்மையான பயன்பாடு என்ன? எப்படி செயல்படுகிறது என்று பொதுநல மருத்துவரும், நீரிழிவுநோய் நிபுணருமான பரணீதரனிடம் கேட்டோம்...  தற்போது உலகளவில் பல்வேறு நாடுகளில் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிற வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான முதற்கட்ட பரிசோதனையான உடல் வெப்பநிலையைக் கண்டறிவதற்கு அகச்சிவப்பு தெர்மோமீட்டர்(Infrared Thermometer) பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக மருத்துவமனைகளில் ஒரு நபருக்கு காய்ச்சல் இருப்பதை தெர்மோமீட்டர் அல்லது வெப்பநிலைமானி என்கிற கருவியை அந்த நபரின் வாய் அல்லது கை அக்குளுக்கு இடையில் வைத்து கண்டறியலாம். இந்தக் கருவியில் உள்ள பாதரசம் உயர்கிற அளவை வைத்து அந்த நபரின் உடல் வெப்பநிலை அதிகரித்திருக்கும் அளவைக் கண்டறியலாம். இதேபோல ஒரு நபரின் உடல் வெப்பநிலையை அந்த நபரைத் தொடாமலேயே குறைந்தது 15 செ.மீ. முதல் அதிகபட்சம் ஒரு அடி தூரத்திற்குள் அகச்சிவப்பு தெர்மோமீட்டரை வைத்து கண்டறிய முடியும்.

இந்த தெர்மோமீட்டரில் இருந்து வெளிப்படக்கூடிய அகச்சிவப்பு கதிரினை(Infrared rays) மேற்சொன்ன தூரத்திற்குள் வைத்து ஒரு நபரின் மீது செலுத்தும்போது, அவருடைய உடலிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்வீச்சு அளவுக்கு ஏற்ப இந்த தெர்மோமீட்டர் அல்லது Body infrared thermometer-ல் உடல் வெப்பத்தின் அளவு பதிவாகிறது. குழந்தைகளின் உடல் வெப்பநிலையைக் கண்டறிவதற்கு குழந்தைகள் பிரிவில் இந்த அகச்சிவப்பு தெர்மோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 100 சதவிகிதம் துல்லியமான அளவைக் கண்டறிய முடியாது. இருந்தபோதும் இந்தக் கருவி பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அவர்களுடைய உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளதா என்பதைக் கண்டறியும் முதற்கட்ட பரிசோதனைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

நோய்களை அது பரவும் விதத்தைப் பொறுத்து Communicable disease (தொற்று நோய்கள்), Non communicable disease (தொற்றா நோய்கள்) என்று வகைப்படுத்துகிறோம். வைரஸ் போன்ற பிற தொற்றுக் கிருமிகளின் பாதிப்புள்ள நபரிடமிருந்து மற்றொருவருக்கு, இருமல் மற்றும் தும்மலின்போது வெளிப்படுகிற எச்சில் மூலமாக தொற்று ஏற்பட்டு நோய் உண்டாகிறது. இதுபோன்ற தொற்றுநோய் பரவும் இடங்களில் உள்ளவர்களுடைய உடல் வெப்பநிலை அதிகரிப்பை எளிதாகவும், பாதுகாப்பான முறையிலும் கண்டறிய முதலில் இந்த அகச்சிவப்பு தெர்மோமீட்டர் மூலம் ஸ்கேனிங் செய்யப்படுகிறது. அதன்பிறகு பாதிப்பு உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

மனித உடலின் சராசரி உடல் வெப்பநிலை அளவு 98.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உள்ளது. இந்த அளவு அதிகரித்து 100-க்கு மேல் செல்கிறபோது அந்த நபருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அதன் பிறகு என்ன மாதிரியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அதனால் என்ன மாதிரியான உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர் ஆலோசனைப்படி அடுத்தகட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
தற்போது இந்த அகச்சிவப்பு தெர்மோமீட்டர் பரிசோதனை கொரோனா நோய்த் தொற்று சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் அதிகமுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் கருவி மூலமாக பரிசோதனை செய்பவர்கள், அதை சரியான தூரத்தில் வைத்து சரியான முறையில் பரிசோதனை செய்வதோடு, N95 Mask அணிவது, Hand Sanitizer மூலம் கைகளை சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதோடு பொது மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் விதம், இதற்கான பரிசோதனை முறைகள், நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

தொகுப்பு: க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்