SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறதியும் நல்லதுதான்!

2020-06-03@ 12:04:45

நன்றி குங்குமம் டாக்டர்

வயது காரணமாக ஏற்படும் அல்ஸைமர், டிமென்ஷியா போன்ற நினைவு இழப்பு நோய் என்பது தீவிரமான மருத்துவ சிகிச்சைகளுக்குட்பட்டது. ஆனால், தினசரி வாழ்வில் ஏற்படும் ஞாபக மறதி என்பது இயல்பானதுதான். ஆனால், இதையே சிலர் அதிகம் யோசித்து கவலை கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலருக்கு குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையைக் கூட ஞாபக மறதி உண்டாக்கிவிடுகிறது. ஆனால், இதை விஞ்ஞானிகள் வேறுவிதமாக பார்க்கிறார்கள். உண்மையில் ஞாபக மறதி, மூளையின் செயல்பாட்டில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அடிக்கடி பயன்படுத்தப்படாத விஷயங்களை மூளை மறக்கச் செய்கிறது. தேவையற்ற நிகழ்வுகளை நமது நினைவில் இருந்து குப்பையைப் போல் அகற்றி, முக்கிய நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைக்க இந்த அமைப்பு உதவுகிறது.

ஆரோக்கியமான மூளைக்கு மறதி அவசியம். நம் மூளைகளில் மறதி எனும் செயல்பாடு நிகழவில்லையெனில், அதன் செயல்பாடு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறதி இல்லையென்றால் நாம் எப்போதும் தேவையற்ற மற்றும் வேதனையான நினைவுகளால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவர்கள், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். விஷயங்களை மறப்பதில் சிரமங்கள் உள்ளவர்கள் உளவியல் பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மறதி நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைவில் வைத்துக் கொண்டேயிருந்தால், நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமது மூளையில் மறதியை நாம் அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக விஷயங்களை நினைவில் வைத்திருப்பது நினைவாற்றலை மந்தமடையவே செய்யும். அதனால், பொருத்தமற்ற விஷயங்களை மறந்துவிடுவது ஒரு வகையில் நல்லது. எனவே, மறதி குறித்து அதிகம் வருத்தமடைய
வேண்டியதில்லை.

இருப்பினும் நினைவாற்றலை அதிகரிக்க யோகாசனம், உடற்பயிற்சி, பிராணாயாமம் செய்வதோடு ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: கௌதம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்