SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்பு ஜாக்கிரதை!

2020-03-03@ 17:52:11

‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று இளம் வயதைச் சொல்வார்கள். துடிப்பும் துறுதுறுப்பும் மிக்க இளைஞர்கள்கூட இன்று ‘கை, கால் வலி, மூட்டுவலி’  என்று மருத்துவமனைக்குப் படை எடுக்கிறார்கள். என்ன பிரச்னை என்று கேட்டால், ‘ஆர்த்ரைட்டிஸ்’ என்கிறார்கள். ஆர்த்ரைட்டிஸ் முதியவர்களுக்குத்தானே வரும் என்று நீங்கள் கேட்டால் அதுதான் இல்லை. ஆர்த்ரைட்டிஸ் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். உடலில், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் (Joints) என்கிறோம். இப்படி இரண்டு எலும்புகளை ஒருங்கிணைக்க இணைப்புத்திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும், லிகமென்ட் எனப்படும் தசைநார்களும், குறுத்தெலும்புகளும் உதவுகின்றன.

கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு, இன்ஃப்ளமேஷன்  இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் எனும் பிரச்னையாக இருக்கக்கூடும். இணைப்பு எலும்புகளுக்கு இடையே குஷன் போன்று உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குழைவான திசுக்கள் அமைப்பு நைந்துபோகும்போது குறுத்தெலும்புகளும், மூட்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதால், வலி, வீக்கம் ஏற்பட்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு அதிக எடை, வயதாகுதல், பரம்பரை, லிகமென்ட் கிழிந்துபோதல், விபத்துகளில் அடிபடுதல், புகைபிடித்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

என்னென்ன வகைகள்?

பொதுவாக, ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மட்டுமே போதுமானது. ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைக்கு ரத்தப்பரிசோதனை எடுக்க வேண்டியது அவசியம். நூற்றுக்கணக்கான ஆர்த்ரைட்டிஸ்கள் வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் டிஜெனரேட்டிவ் பிரச்னையும் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் ரத்தத்தில் ஏற்படும் குறைபாட்டால் வரும் ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையும்  முக்கியமானவை. இவைதான் பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் தீவிர ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை. இதைத் தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஜுவனைல் ஆர்த்ரைட்டிஸ், தொற்றுக்கிருமிகளால் ஏற்படும் இன்ஃபெக்ட்சியஸ் ஆர்த்ரைட்டிஸ், வளர்சிதை மாற்றப் பிரச்னைகளால் ஏற்படும் மெட்டபாலிக் ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளும் நம் நாட்டில் அதிகமாக உள்ளன.

ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

இணைப்புகள், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு ஆகியவைதான் ஆர்த்ரைட்டிஸின் பொதுவான அறிகுறி. இந்த வலி மற்றும் இறுக்கம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கக்கூடும். சிலருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் வந்து போவதாகவும் இருக்கக்கூடும். நாட்பட்ட ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால், இணைப்புகளில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு சிலவகை ஆர்த்ரைட்டிஸ்கள் இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் தீர்வுகள்

* பிசியோதெரப்பி

* ஓய்வு

* ஐஸ்கட்டி மற்றும் வெந்நீர் ஒத்தடம்

* ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

* சரியான உடல் எடைப் பராமரிப்பு

* இணைப்புகள், மூட்டுகளைச் சுற்றிலும் உள்ள தசையை வலுவாக்கும் பயிற்சிகள்

* வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மருந்து, மாத்திரைகள்

* போதுமான ஓய்வு

* தீவிரப் பாதிப்பு என்றால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை

* உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள்


இதெல்லாம் சாப்பிடுங்க!

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், ஃபிளக்ஸ் விதைகள், ஆளிவிதைகள், வால்நட், முட்டையின் மஞ்சள் கரு, சோயா பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை எனப்படும் அஸ்கா சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகையிலை, சிகரெட், மதுவை அறவே தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு: இளங்கோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்