Medical Trends
2020-02-26@ 16:47:18

நன்றி குங்குமம் டாக்டர்
சைக்கிள் ஓட்டினால் மன அழுத்தம் குறையும்!
தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது ஒருமணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு ஈடானது. இளமை தோற்றத்துடன் மிளிர்வதற்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சி பலன் கொடுக்கும். சருமம், எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளும் சைக்கிள் ஓட்டுவதால் புத்துணர்ச்சி பெற்று இளமைக்கு வழிவகுக்கும். உடல் இயக்கத் திறனும் அதிகரிக்கும். சைக்கிள் ஓட்டும்போது வேகமாக சுவாசிப்பீர்கள். அதனால் உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். அது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சைக்கிள் ஓட்டுவது ஏரோபிக் உடற்பயிற்சியுடன் தொடர்புடையது. இதய நோய்களுக்கான அபாயத்தை குறைக்க உதவும். மூளையில் செரோடோனின், டோபமைன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து எல்லா நேரமும் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் வழிவகை செய்யும். உடல் பருமன் காரணமாக நீரிழிவு, கல்லீரல் நோய் பாதிப்புகள் நேரும். தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது உடல்பருமன் பிரச்னையில் இருந்து விடுபட வழிவகை செய்யும். சைக்கிள் ஓட்டும்போது ஏராளமான கலோரிகள் செலவாவதால் உடலும் கட்டுக்கோப்பாக மாறும்!
குளிர்காலததில் அதிகரிக்கும் உடல் எடை
குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தைவிட சற்று அதிகரித்துவிடும். மற்ற பருவ காலங்களைவிட நொறுக்குத்தீனிகளை அதிகமாக சாப்பிட விரும்புவதும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு சோம்பேறித்தனம் கொள்வதும், அதற்கு இணையாக இல்லாமல் குறைவான அளவில் கலோரிகள் எரிக்கப்படுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதனால் குளிர்காலத்தில் கலோரி குறைவான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சிக்கனமாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்!
பணத்தை மிச்சப்படுத்துவது, குறைவாக ஷாப்பிங் செய்வது போன்று பட்ஜட் போட்டு செலவு செய்வது போன்ற பழக்கங்கள் ‘தனிப்பட்ட நிதிநிர்வாகத்துக்கும்’ அப்பால் பல நன்மைகளை தருவதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு சொல்கிறது. இந்த புதிய ஆய்வின்படி, ‘செயல்திறன் மிக்க நிதி உத்திகளை’ செயல்படுத்தும் மில்லினியல்கள் (1981-1996 இடையில் பிறந்தவர்கள்) தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பொருட்களை குறைவாக வாங்கும், செலவு குறைவாகச் செய்யும் பழக்கமுள்ள நபர்கள் குறைந்த மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டிருப்பதால், இவர்களிடத்தில் நேர்மறையான மனநல விளைவு இருப்பதாகவும், அதே நேரத்தில் அதிகம் செலவழிக்கும், தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள் மனச்சோர்வு அறிகுறிகளோடு எதிர்மறையான மனநல விளைவு கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்
Tags:
Medical Trendsமேலும் செய்திகள்
ஓடிப்போ புற்றுநோயே!
யின் யாங் டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேவரைட் டயட்!
உணவே மருந்து - உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்
மூளையை பாதிக்கும் உணவுகள்!
உடலின் தேவை அறிந்து உடற்பயிற்சி செய்யலாம்!
ஜீரோ சைஸ் ஆரோக்கியமானதில்லை!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்