SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறிகளின் அரசன் முருங்கை

2020-02-20@ 17:22:19

நன்றி குங்குமம் டாக்டர்

* ஏழைகளின் மரப்பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது.

* பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது. முருங்கைக்காயை சூப்பாக செய்து சாப்பிட்டால் அருமையான மருத்துவ குணங்களை அழியாமல் பெறலாம்.

* மனித நாடி, நரம்புகளை உரமேற்றி, மெருகேற்றுவது முருங்கை. கபத்தை வெளியேற்றும். உடலுக்கு அருமையான பலத்தை தரும். நலிவடைந்தவர்களுக்கும் பிணிகளால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் முருங்கைக்காய் சூப் ஒரு வரப்பிரசாதம்.

* இரத்த விருத்திக்கு தினம் முருங்கைக்காய் சாப்பிட்டு வரலாம். சிறுவர், சிறுமியர் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் தவிர்க்கலாம். எலும்புருக்கி நோய் சரியாகும். பெண்களின் மாதவிடாய் நோய்கள், உதிரப்போக்கு முதலியன நீங்கும்.

* காக்காய் வலிப்பு நோயால் அவதியுறும் அன்பர்கள் அடிக்கடி அரை வேக்காடு பதத்தில் முருங்கைக்காய் சூப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* நரம்பு பிரச்னை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து மிகுந்து உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

* நீரிழிவு நோயாளிகள் நலத்திற்கு உத்திரவாதம் தரும் ஒப்பற்ற காய். மாலைக்கண் வியாதிகளை நீக்க வல்லது.

* கண்ணாடி அணிந்தவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் அதிகமாவதைத் தடுக்கலாம்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.


குளிர்கால டிப்ஸ்

* பனிக்காலத்தில் சருமம் உலர்ந்து வெடிப்பு ஏற்படும். இதை குணப்படுத்த வைட்டமின் ஈ காப்ஸ்யூல் எண்ணெயை இரவு முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின், இளஞ்சூடான நீரால் முகத்தை கழுவி வரவும்.

* பனிக்காலத்தில் உதடு வெடித்து எரிச்சல், வலி ஏற்படலாம். இதற்கு தினசரி வாஸலைன் கிரீம் அல்லது ஒயிட் பெட்ரோலிய ஜெல்லி பூசி வருவது நல்லது.

* குளிர்காலத்தில் முகத்திற்குப் பூச எலுமிச்சை சாறை பயன்படுத்த வேண்டாம். பாலாடையை எடுத்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வரலாம்.

* வீட்டிற்குள் ஈரம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தரையை துடைத்த பிறகு பழைய பெட்ஷீட், சணல் சாக்கு போன்றவற்றை தரை காயும் வரை ஆங்காங்கே விரித்து வைக்கவும்.

* பனிக் காலத்தில் துணிகள் எளிதில் உலர்வதில்லை. எனவே கனமான, முரட்டுத் துணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

* ஸ்வெட்டர், சாக்ஸ், மப்ளர் போன்றவற்றை எடுத்து சுத்தப்படுத்தி ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

* தீப்பெட்டி, விளக்கு, மெழுகுவர்த்தி, எமர்ஜென்ஸி லாம்ப், டார்ச் போன்றவை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தக்க சமயத்தில் உதவியாக இருக்கும்.

* வெளியே போய் வந்ததும் சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, கிரீம் பூசவும். இதனால் சேற்றுப்புண் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

* பனிக்காலத்தில் மிளகு, ரசம், பூண்டு, வெங்காயம் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால், நோய்க்
கிருமிகள் பரவாது.

* எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

* இருமல் சிரப், காய்ச்சல், தலைவலி மாத்திரைகள் மற்றும் விக்கல் போன்றவற்றை தயாராக வைத்திருப்பது குளிர்காலத்தில் ஏற்படும் திடீர் சளி, இருமல், தும்மல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும்.

தொகுப்பு: சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2020

  19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-10-2020

  16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • farmerprotest15

  வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

 • telunganarain15

  ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

 • navarathri15

  நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்