SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முப்பிணி தீர்க்கும் மூலிகை!

2019-12-05@ 11:56:43

நன்றி குங்குமம் டாக்டர்

*வில்வம்

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் அத்தனை பாகங்களும் நம் உடற்பாகங்களுக்கு அருமருந்தாகும்’ என்கிறார் சித்த மருத்துவர் சாய் சதீஷ்.

* வில்வமானது கூவிளம், சிவத்துருமம், மாதுரம், நின்மலி, குசாபி என்ற வேறு பெயர்களிலும் குறிப்பிடுவதுண்டு. Aegle marmelos என்பது வில்வத்தின் தாவரவியல் பெயராகும்.

* வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

* வில்வத்தினை காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு செய்து ஊறுகாய், குடிநீர் என பல வகைகளிலும் உட்கொள்ளலாம். வில்வத்தை தைல முறையிலும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம்.

* வில்வத்தின் இலை, பிஞ்சு, காய் இவை துவர்ப்பு சுவையில் இருக்கும். கனி துவர்ப்புடன் இனிப்பு கலந்த சுவையில் இருக்கும்.

* வில்வம் அழகையும் உடல் வலிமையையும் தரும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.

* வில்வ மரத்தின் பூவானது வாய் துர்நாற்றத்தைப் போக்கி விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது என்பது மற்றோர் சிறப்பு.

* வில்வத்தின் இளம் பிஞ்சை அரைத்து 2-6 கிராம் எருமைத்தயிரில் கலந்து கொடுக்க அல்சர், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நிற்கும். இந்த முறை சிறுபிள்ளைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

* வில்வத்தின் பூக்கள் மந்தத்தைப் போக்கும். புதிய வில்வப்பூக்களை குடிநீராகச் செய்து 40 லிருந்து 80 மில்லி அளவோ அல்லது காய்ந்த வில்வப்பூக்களை பொடி செய்து 260 லிருந்து 1040 மில்லி அளவோ கொடுத்தால் மந்தம் போகும்.

* அல்சர், ரத்த சோகை, கபத்தால் உண்டாகும் நீர் வேட்கை, காய்ச்சல், தலையில் நீர்க்கோர்த்துக் கொள்ளுதல், உடல் சூடு மற்றும் வாதம், பித்தம், கபம் இவற்றினால் ஏற்படும் நோய்கள் (முப்பிணி) போன்றவற்றை நீக்கும்.

* வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொண்டால் பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம்(அழல் சுரம்), இடை
விடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும்.

* வில்வப் பத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு மூன்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, எட்டில் ஒரு பங்காக நீர் சுருங்கிய பின் அதனை வடிகட்டி அத்துடன் தேன் கலந்து அருந்த கொடிய முப்பிணி, வாந்தி தீரும்.

* வில்வ வேர், விளாவேர், நன்னாரி வேர், சிறுபயறு, நெல்பொரி, வெல்லம் இவற்றை 11 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவிட்டு, அந்த நீர் ஒரு லிட்டராக சுருங்கிய பின் அதனை அருந்த வாந்தியும் காய்ச்சலும் நீங்கும்.

* இரண்டிலிருந்து நான்கு கிராம் அளவு, நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று முறை கொடுத்து வர, காச நோயில் ஏற்படும் கண் சூடு குறையும். குருதிப் போக்கு, கழிச்சல், சீதக்கழிச்சல் போகும்.  

* இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும். இலைச்சாற்றுடன் நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும். இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து  80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் நீங்கும்.

இன்றைய நவீன வாழ்க்கையில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆம்.., மன உளைச்சலால் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு வில்வம் ஒரு சிறந்த மருந்து.

* வில்வக் காயை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை குழந்தைகளுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மில்லி கிராம் அளவு, பெரியவர்களுக்கு இரண்டிலிருந்து நான்கு கிராம் அளவு தினம் இருவேளை கொடுக்க, சீதக்கழிச்சல், மூலத்தினால் உண்டாகும் ரத்தப்போக்கு நிற்கும். வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நீர் சேர்த்து காய்ச்சி குடிக்க மூல நோய் நீங்கும்.

* வில்வப்பழம், கார்போக அரிசி, வெந்தயம், ஒவ்வொன்றும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனை பசும்பால் விட்டு அரைத்து, எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து தலை மூழ்கி வர, கண்ணெரிச்சல், தலைவலி, உடல் எரிச்சல், மண்டைச் சூட்டினால் ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் உடலுக்கு அழகும் வன்மையும் உண்டாகும்.கண் சூடு நீங்கும்.

* வில்வக்காயை பசும்பால் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்க மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கி
கண்கள் குளிர்ச்சியடையும்.

* வில்வப்பழச் சதையை 100 கிராம் அளவிற்கு எடுத்து அதனுடன் 200 மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி எடுத்தால் அதுதான் வில்வ மணப்பாகு. இதனுடன் தேன் கலந்து அருந்தலாம். 80 லிருந்து 140 மில்லிவரை, இரண்டிலிருந்து மூன்று வேளை அருந்தி வர குடலுக்கு வலிமை கொடுத்து கழிச்சலை நிறுத்தும்.

* இன்றைய நவீன வாழ்க்கையில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆம்.., மன உளைச்சலால் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு வில்வம் ஒரு சிறந்த மருந்து.

 சக்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்