SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்கள் கண்களை கவனியுங்கள்!

2019-11-28@ 11:24:07

நன்றி குங்குமம் தோழி

* கண்கள் குளிர்ச்சி பெற பசு நெய் சாப்பிடவும்.

* கண்வலி, கண் சிவப்பு மாற புளியம்பூவை அரைத்து கண்களைச்சுற்றி பற்றுப் போட்டு வந்தால் கண்வலி தீரும்.

* கண்வலி, கண் அரிப்பு நீங்க வில்வ மரத்தின் தளிர் இலைகளை நன்றாக வதக்கி கண்ணை மூடிக்கொண்டு அதன்மேல் ஒத்தடம் கொடுக்க மாறும்.

* கண் எரிச்சல் நீங்க அடிக்கடி அரைக்கீரை சாப்பிட்டு வரவும்.

* மாலைக்கண்  நோய் ஆரம்பத்திலேயே தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர மாலைக்கண் சரியாகும்.

* கண் பார்வை தெளிவடைய பச்சைப் பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்றுவிட்டு பால் பருகிவர கண் பார்வை தெளிவடையும்.

* கண் எரிச்சல், நீர் வடிதல் பிரச்னைக்கு நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர கண் எரிச்சல் மாறும்.

* கண் ஒளி புத்துணர்ச்சி பெற தூதுவளைக்காய், தூதுவளை வத்தல் சாப்பிட்டு வர கண் ஒளி பெறும்.

* கண்வலி வராமல் தடுக்க எள் செடியின் பூவைப் பறித்து பற்களில் படாமல் வாயில் போட்டு விழுங்கிவிட கண்வலி வராது.

* கண்கள் சிவப்பாக மாறிவிட்டதை குணமாக்க புளியமரத்தின் இலையை ஒரு மெல்லிய துணியில் வைத்து கண்களின் மேல் வைத்து கட்டி சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவிழ்த்துவிட கண் சிவப்பு மாறும்.

* கண் பார்வை கூர்மை அடைய தான்றிக்காய் தோலை உரித்து பொடி செய்து கால் கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மை பெறும்.

தொகுப்பு: நீலாமணி கோவிந்தராஜன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்