SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்பை வலுவாக்கும் எள்ளு!

2019-11-27@ 14:10:45

நன்றி குங்குமம் தோழி

சின்னஞ்சிறிய எள்ளில் அள்ளக் குறையாத நன்மைகள் உள்ளது.

* நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம் இவற்றைக் குணப்படுத்துகிறது.

* புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

* சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* எலும்புகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் செய்கிறது.

* மனத்தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

* உடலைத் தூய்மைப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.

* இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், புரதம் மற்றும் ட்ரிப்போபான் போன்ற இயற்கையான கரிம சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன.

* இதில் துத்தநாகம் கொலாஜன் உருவாவதற்கான முக்கிய காரணியாக இருப்பதால், தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

* வாய்ப்புண்ணைக் குணமாக்கும் வல்லமை எள்ளுக்குண்டு.

- சு.இலக்குமண சுவாமி, மதுரை.

செரிமானத்தை தூண்டும் காளான்...

காளான், மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளானில் பல நன்மைகள் உள்ளன.

* புரதச்சத்தும், உடலுக்கு வேண்டிய ஆற்றலையும் தரும்.

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு காளான் சிறந்த உணவாகும்.
* முதியோர்களுக்கு எளிதில் செரிமான ஆற்றலைத் தரும்.

* இரும்புச்சத்து மற்றும் இதில் எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

* வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகவும், பிரியாணியாகவும் செய்து சாப்பிடலாம்.

* இதில் ஆரஞ்சைவிட 4 மடங்கும், ஆப்பிளைவிட 12 மடங்கும், முட்டைக்கோஸை விட இரு மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும் உள்ளன.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

ரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்திற்கு கஜ்ஜீர் பழம் என்ற பெயரும் உண்டு. பேரீச்சம்பழத்தில் உயிர்ச்சத்துக்களும், இரும்புச் சத்தும் ஏராளமாக இருக்கிறது.

* வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பேரீச்சம்பழத்தைச் சாப்பிடக் கொடுப்பதால் எலும்பு வளர்ச்சி, நரம்பு உறுதி, இருதய பலம், மூளைக்கு வலிமை ஏற்பட்டு உடல் வளர்ச்சி பெறுகிறது.

* நாலு பேரீச்சம்பழங்களைப் பாலில் வேக வைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி விடும்.

* பேரீச்சம்பழச்சுளைகளைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால் மூளையும், நரம்புகளும் வலிமை பெறுகிறது.

* பேரீச்சம்பழத்தையும், வெள்ளரிப் பிஞ்சையும் சாப்பிட்டால் கல்லீரலில் வரும் நோய்கள் குணமாகிறது.

* உடல் வெப்பத்தை மிக எளிதில் தணிக்கக் கூடியது. இந்தப்பழம் பசியைத் தூண்டி நன்றாகச் சாப்பிட வைக்கும்.

* வெகு விரைவில் ஜீரணமாகும் என்பதால் நோயுற்ற காலத்திலும் தயக்கமின்றி உண்ணக்கூடிய பழம் பேரீச்சம்பழம்.

* கர்ப்பிணிப் பெண்களின் உடலில் கர்ப்பகாலத்தில் இரும்பு சத்தினை அதிகரிக்க ஏற்ற மிகச்சிறந்த பழம் பேரீச்சம்பழம் ஆகும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்