SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைனஸா? கவலை வேணாம்.. வினிகர் போதும்!

2019-11-13@ 15:41:02

நன்றி குங்குமம் டாக்டர்

சளிப் பிடித்ததோ சனிப் பிடித்ததோ என்பார்கள். உண்மையில் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு சளிப் பிடித்தால் சனியே பிடித்தது போன்ற அவதிதான். நம் மூக்கைச் சுற்றிலும் நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இவற்றின் பெயர்தான் சைனஸ். இந்த காற்றுப் பைகள் நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு சரியான வெப்பத்துடன் காற்றை அனுப்பும். இவற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை சைனசிடிஸ் என்பார்கள்.

சைனஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்றவை இருக்கும். மேலும் கண்களுக்கு கீழே, கன்னம், நெற்றி போன்ற இடங்களில் தொட்டால் வலி ஏற்படும். பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும். முக்கியமாக துர்நாற்றமிக்க சளி வெளியேறும். சைனஸ் பிரச்சனைக்கு சைனஸ் அழுத்தப் புள்ளியைத் தொடுவது ஒரு எளிய தீர்வு.

நாக்கை வாயின் மேல் பகுதியில் ஒட்டிக்கொண்டு, இரு புருவங்களுக்கிடையே உள்ள நெற்றிப் புள்ளியில் பெருவிரலால் 20 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சைனஸ் பிரச்சனையில் இருந்து சற்று உடனடி நிவாரணம் கிடைக்கும். சைனஸ் பிரச்சனையை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க ஆப்பிள் சிடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர் செய்யும் மாயங்கள் ஆப்பிள் சிடர் வினிகர் கொண்டு சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காணும் போது, சைனஸ் வலி வேகமாக குறைவதோடு, அங்குள்ள திசுக்கள் ஆரோக்கியமாக்கப்படும். ஏனெனில் ஆப்பிள் சிடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், அதனை சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரியும் போது, பச்சையாக உட்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, வேறுசில நன்மைகளும் கிடைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.

ஆப்பிள் சிடர் வினிகர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1/2 கப்,
ஆப்பிள் சிடர் வினிகர் - 1/4 கப்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

தயாரிக்கும் முறை:

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அத்துடன் தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்தால், பானம் தயார். இந்தப் பானத்தை சைனஸ் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை தினமும் ஒரு டம்ளர் பருகலாம்.

தொகுப்பு: இளங்கோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்